| | |
| | வற்றை இறைவரது திருவருளாகவே மதித்து; அங்கு...உறுவார் - அங்கு அடியார்க்கு அமுது செய்வித்து இன்பமடைவாராகி, |
| | 8 |
| | 3626. (இ-ள்) முற்சூது...கொள்ள - முதல் ஆட்டத்தில் தாம் தோல்வியை ஏற்று முதற்பந்தயப் பணத்தை ஒட்டினவர் கொள்ளச் செய்து; பிற்சூது ....ஆக்கி - பின்பு ஆடும் சூதாட்டத்தில் பலமுறையும் தாமே வென்று பெரும் பொருளைத் தம்மதாக்கி; சொற்சூதால்....நானிலத்தில் - வஞ்சச் சொற்களால் மறுத்தவர்களை உடைவாளுருவிக் குத்தி, நற்சூதராகிய இந்நாயனார் நானிலத்தில் மூர்க்கர் என்னும் பெயர் பெற்றனர். |
| | 9 |
| | இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| | 3625. (வி-ரை) இருள் - இங்குக் கருமை - நீல நிறம் குறித்தது. |
| | மணிகண்டர்க்கும் அடியார்க்கும் - என உம்மை விரித்துரைத்தலுமாம்; என்னை? அடியவர்க்குள் நின்று சிவனே உண்கின்றார் என்பது சிவாகம ஆனையாதலின்; "நடமாடுங் கோயி னம்பர்க்கொன் றீயிற், படமாடக் கோயிற் பரமர்க்கங்காமே". |
| | பொருள் ஆயம் - ஆயம் - பெருக்கு; ஈட்டம். பொருளாயம் - பொருள் வருவாய்; (பொருளும் பொருள் வருவாயும்); உம்மைத்தொகை; ஆயம் - வடமொழித்திரிபென்பர் பரிமேலழகர்; ஆயம் - ஆதாயம்; உருளாயம் - உருளுகின்ற பாச்சிகையினாற் சூதை ஆடி; "உருளும் கவற்றின்கட்பட்ட ஆயம்; கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல் ஏற்றி.....கூறினார்" (பரிமே). |
| | அம்பலம் - ஊர்ப் பொதுவிடம்; பலர் கூடும் பொது இடம்; பொதியில்; மன்றமும் பொதியினும்" (முருகு); புகழ் - சூதாட்டத்தினும் பெயர் பெற்ற என்ற குறிப்புமாம். சூதாடும் பொதுவிடங்களும் அந்நாளில் வெளிப்படையாய் அமைந்திருந்தன போலும்; இந்நாளிலும் அவை வழிவழி வேறு வேறு உருவங்களுள் மறைந்து விளங்குதல் கண்டுகொள்ளத் தக்கது. |
| | உருள் ஆயச் சூது ஆடி - ஆயம் - சூதாடு கருவி; வல் - என்பர்; உருள் ஆயம் - ஆயத்தினை உருட்டி ஆடுதல் சூதின் வகை; "உருளாய மோவது கூறிற் பொருளாயம், போஒய்ப் புறமேபடும்" (குறள்). |
| | வென்றன உறும் பொருள் - வென்றனவாகப் பெறும் பொருள்கள் எல்லாம்; அருள் - அருளால் வந்த பொருளை அருள் என்றது உபசாரம். |
| | நம்பர் அருளாகவே - சிவனருட்பிரசாதமாகவே; சிவன் அருளிய பொருளாக; ஏகாரம் தம் முயற்சியாற் செய் சூதான் வந்ததென்பதன்றிச் சிவன் தந்ததாகவே எனப் பிரிநிலை; தேற்றமென்பதுமாம். |
| | அமுது செய்வித்து இன்புறுவார் - அமுது செய்வித்து அதனைக் கண்டு தாம் மகிழ்வார்; இன்புறுவார் - முற்றெச்சம், வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. |
| | அம்பலம் - சூதாடு களங் குறித்தது. "கழகத்துக் காலை புகின்" (குறள்). |
| | 8 |
| | 3626. (வி - ரை) முற்சூது - முதல் ஆட்டத்தில் 7ம் வேற்றுமைத் தொகை. |
| | தாம் தோற்று - தாமே தோல்வியை ஏற்று; தோல்வியைக் காட்டி; பணயம் - பந்தயப் பொருளை. அவர் - எதிராக ஆடுவோர்; பலரறி சுட்டு. |
| | பிற்சூது - பின்பு ஆடும் ஆட்டங்கள். |
| | முற்சூது....ஆக்கி - இது சூதாட்டத்திற் கைதேர்ந்தோர் செய்யும் முறை; தோற்று - தோல்விப் பட்டார்போற் காட்டி; முதலிற் சிறு பொருளின் வெற்றி |