பக்கம் எண் :

536திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

தந்து ஆசைகாட்டி அவ்வாசை காரணமாக அவர் கைப்பொாருளினைப் பலமுறையும் இழக்கச் செய்தல் சூதின் நுட்பங்களுள் ஒன்று. ஆக்கி - விருத்தியாக்கி.
சொற்சூதால் மறுத்தாரை - சூதுச் சொல்லால் மறுத்தார்களை என்பது; இங்குச் சூது என்பது வஞ்சச்சொல் என்ற பொருளில் வந்தது.
நற்சூதர் - "நற்சூதால்." (3623); மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் - மூர்க்கர் என்பது இந்நாயனாருக்குக் காரணப்பெயர். நற்சூதர் என்றும், மூர்க்கர் என்றும் வழங்கப்படும் பெயர்களைப் பெற்றார்; "கற்ற சூதன்" (நம்பி. தேவா)
நற்சூதால் - என்பதும் பாடம்.

9

3627
சூதினில்வென் றெய்துபொருள் துரிசற்ற நல்லுணர்விற்
றீதகல வமுதாக்கு வார்கொள்ளத் தாந்தீண்டார்
காதலுட னடியார்க ளமுதுசெயக் கடைப்பந்தி
ஏதமிலா வகைதாமு மமுதுசெய்தங் கிருக்குநாள்,

10

3628
நாதன்ற னடியார்க்கு நல்லடிசி னாடோறும்
ஆதரவி னாலமுது செய்வித்தங் கருளாலே
ஏதங்கள் போயகல விவ்வுலகை விட்டதற்பின்
பூதங்க ளிசைபாட வாடுவார் புரம்புக்கார்.

11

3628, (இ-ள்) சூதினில்....தீதகல - (முன் கூறியவாறு) சூதாட்டத்தினில் வெற்றிக்கொண்டு பொருந்தும் பொருள் குற்றமற்ற நல்லுணர்வின் பயனாகத் தீமை நீங்க; அமுதாக்குவார்....தீண்டார் - தாம் கையாலும் தீண்டாது அமுது ஆக்குவோர்கள் கைக்கொள்ளச் செய்து; காதலுடன்....அமுது செய்து - பெருவிருப்பத்துடனே அடியார்கள் அமுது செய்ய அதன்பின்பு குற்றமில்லாதவகையால் கடைப்பந்தியில் இருந்து தாமும் அமுதுசெய்து; அங்கு இருக்கும் நாள்- அப்பதியில் தங்கியிருக்கும் நாள்களிலே,
3628. (இ-ள்) நாதன்றன்......அமுத செய்வித்து - தலைவராகிய சிவபெருமானுடைய அடியவர்களுக்கு நல்ல திரு அமுதினை நாடோறும் அன்போடும் அமுது செய்வித்து; அங்கு...போயகல - அங்குத் திருவருளினாலே குற்றங்கள் நீங்கப் பெற்றதனால்; இவ்வுலகை....புரம்புக்கார் - இவ்வுலகை விட்டபின்பு பூதகணங்கள் சூழ்ந்து இசைபாட ஆடுகின்ற சிவபெருமானது உலகமாகிய சிவபுரத்தினிற் புகுந்தமர்ந்தனர்.

11

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
3627. (வி-ரை) சூதினில் வென்று - முன் கூறியவாறு ஆடிய சூதில்வென்று; இங்குச் சூது என்றது சூதாட்டம் என்றும், முற்சூது தோற்று, பிற்சூது பலமுறையும் வென்று என்றவை சூதுத்தந்திரம் என்றும் பொருள்பட நின்றன.
துரிசற்ற நல்லுணர்வில் தீதகல - துரிசு - சூது முயல்வதனால் வரும் குற்றமும், சூதின்வரும் பொருளை அனுபவிப்பதனால் வரும் குற்றமும்; அற்ற அறுதற்கேதுவான; அறுவித்த என்க. உணர்வில் - உணர்வினாலே; தீது முன்சொன்ன துரிசு; அகல - அகலும்படி. பொருள் - பொருளை; 2-ம் வேற்றுமைத்தொகை.
அமுது ஆக்குவார்....தீண்டார் - சூதின் வந்த பொருளினைத் தாம் கையாற் றீண்டுதலும் செய்யாராகி; அதனை முழுதும் அந்நிலையினின்றவாறே திருவமுது