பக்கம் எண் :

538திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

வல்லார்கள் - வல்லினை உடையவர்கள்; சூதாடுபவர்கள்; வல் - சூது; சூதாடு கருவி; வலியவர்கள் என்று கொண்டு இப்புராணத் தொடர்பால் சூதில் வலியவர்கள் என்று கொள்வதுமாம்; அப்பொருளில் வல்லார்கள் தமையும் என்று சிறப்பும்மை விரிக்க.
அல்லாரும் கறைக் கண்டர் - "இருளாரு மணிகண்டர்" (3625); தீய விடத்தினை ஏற்றருளியது போலத் தீய சூதில் வந்த பொருளினையும் ஏற்றவர் என்பது குறிப்பு.
ஆக்கும் - அமுதாக்கும் என்றும், ஆகச்செய்யும் - பயன்படுத்தும் - என்றும் உரைக்க நின்றது.
நல்லார் நற்சூதராம் - நல்லாராதலின் நற்சூதர் எனப்பெற்றார் என்பது. (3626) பார்க்க.
வணங்கிச் சொல்லுவாம் - வணங்கி அத்துணையாற் பெற்ற வலிமைகொண்டு சொல்லப் புகுவோம்.
சொல்லார் சீர் - "வேதம் பயிலும் மறையாளர் குலத்தின்வந்த மேலோராகிய சிறப்பு" (3630) என இதனை மேல் விரிப்பது காண்க. சொல் இங்கு இறைமொழியாகிய வேதத்திற் சிறந்த ஐந்தெழுத்தாகிய சொற்களின் தொகுதி என்ற பொருள்தந்து நின்றது; வேதச் சொல் நிறைந்த சிறப்பு; எடுத்துச் சொல்லத்தக்க சிறப்பு என்றலுமாம். முடிபும் தோற்றுவாயும் இவ்வாறு கண்டுகொள்க. "வேதப் பொருளஞ் செழுத்தும் விளம்பி யல்லான் மொழியான்" (திருத்தொண்டர் திருவந்தாதி - 39).

12


சரிதச் சுருக்கம்:- தொண்டை வள நாட்டில் பாலியாற்றின் வடபாலில் உள்ளது திருவேற்காடு என்னும் பதி; அதிற் சிவனடிமைத் திறத்தில் வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்தவர் ஒரு பெரியார்.
அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்ற அறிந்து அடியார்க் கமுது முன் ஊட்டி மகிழ்ந்த பின்பு தாம் அமுது செய்யும் நியதியில் வழுவாத நிலையின் ஒழுகி வந்தனர்.
இவ்வாறு ஒழுகும் நாளில் அடியவர்கள் நாணாளும் மிகவும் பெருகி வந்தமையாலே தமது உடைமை முழுதும் மாள விற்றும் அப்பணி செய்தனர், மேலும் செய்து வருவதற்கு அவ்வூரில் ஒரு பற்றுக்கோடும் இல்லாமையால் தாம் முன்பு கற்ற வருவதற்கு அவ்வூரில் ஒரு பற்றுக்கோடும் இல்லாமையால் தாம் முன்பு கற்ற தன்மை நற்சூதினாற் பொருளாக்க முயன்றனர். ஆனால் அங்குச் சூது பொருவார் இல்லாமையால் அங்கு நின்றும் வேற்றூர்க்குப் போவாராயினர்.
பல பதிகளிலும் சென்று சிவனை உள்ளுருகிப் பணிந்து அங்கங்கும் சூதாடுதலினால் வந்த பொருளினைக் கொண்டு தமது நியமமாகிய அடியார் பணியினை நியதியாய் முடித்துச் சென்று திருக்குடந்தையினை சேர்ந்தனர்.
அங்குத் தாம் வல்ல சூதினால் வந்த பொருளைக் கொண்டு நாடோறும் அடியார்க் கமுதூட்டி இருந்தனர். சூதினில் வல்ல தன்மையாமாறு, முதற் சூது தாம் தோற்றும், பிற்சூது பலமுறையும் தாம் வென்று பெரும் பொருள் ஆக்குதலும், சூதினால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்துதலும் ஆம். இதனால் இவர் நற் சூதர் - மூர்க்கர் - என்னும் பெயர்களைப் பெற்று உலகில் விளங்கினார்.
இவ்வாறு பணிசெய்து அருளாலே ஏதங்கள் போய் அகல - இவ்வுலகை விட்டதற்பின். இறைவரது சிவபுரம் அடைந்தனர்.