| |
| உ சிவமயம் |
| 33, சோமாசி மாற நாயனார் புராணம் |
| தொகை |
| "அம்பரான் சோமாசி மாறனுக்கு மடியேன்" | |
| - திருத்தொண்டத் தொகை - (5) |
| வகை |
| சூதப் பொழிலம்ப ரந்தணன் சோமாசி மாறனென்பான் வேதப் பொருளஞ் செழுத்தும் விளம்பியல் லான்மொழியான் நீதிப் பரன்மன்னு நித்த நியமன் பரவையென்னு மாதுக்குக் காந்தன்வன் றொன்டண் றனக்கு மகிழ்துணையே. | |
| - திருத்தொண்டர் திருவந்தாதி - (39) |
| விரி |
3630 | சூதம்பயி லும்பொழி லம்பரிற் றூய வாய்மை வேதம்பயி லும்மறை யாளர் குலத்தின் மேலோர் ஏதம்புரி யும்மெயில் செற்றவர்க் கண்பர் வந்தாற் பாதம்பணிந் தாரமு தூட்டுநற் பண்பின் மிக்கார். | |
| 1 |
| புராணம் :- சோமாசி மாற நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி, நிறுத்த முறையானே, ஆசிரியர், ஆறாவது வம்பறா வரிவண்டுச் சருக்கத்துள் ஆறாவது சோமாசி மாற நாயனார் சரிதங் கூறத்தொடங்குகின்றார். |
| தொகை:- திரு அம்பர் என்னும் பதியில் அவதரித்த சோமாசி மாற நாயனாருக்கும் நான் அடியேனாவேன். அம்பர் - பதி; திரு இன்னம்பர் என்று வழங்கப்படும்; தலவிசேடம் பார்க்க. வேதாகமங்களின் விதித்தவாறு சிவயாகங்களை நியம நியதியாகச் செய்யும் மறையோர் சோமாசி (சோமயாசி) எனப் பட்டப் பெயர் வழங்கப்பெறுவர்; மாறர் - என்பது இந்நாயனாரது இயற்பெயர்; இவர் சிவயாகம் செய்த பெருமையும் தன்மையும் விரிநூலினுள் (3631) விரிக்கப்படுதல் காண்க. வகைநூல் வகுத்த நிலையும் ஆண்டுக் கண்டுகொள்க, - இவர் செய்த பெருயாகத்தில் சிவபெருமான் தேவியாரும் தாமுமாக நீச வடிவத்துடன் வந்து அவிகொண்டருளினர் என்றதொரு வரலாறு திருவம்பர்த் தலமான்மியங்களுள் சிறப்பாக வழங்கப்படுகின்றது. அதன் பொருட்டு அம்பர் யாகம் என்றதொரு விழாவும் சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப் படுகின்றது. ஆசிரியர் அதனைக் குறிப்பாலுணர்த்தியதன்றி விரித்துக் கூறிற்றிலர். அது, தல மான் யியங்களாக அங்கங்கும் |