| வேறாக நிறைந்த வழிபாடு விளங்கிய பூசனையைச் செய்து; நீறணியும்....அளித்து - திருநீறணிந்த திருத்தொண்டர்களாய் அன்று அணைந்தவர்களுக் கெல்லாம் குறையாமல் நிகழும் நூறு பசும்பொன் அளித்து; இன் அமுது நுகர்விப்பார் - இனிய திருவமுதும் ஊட்டுவாராகி, 4 |
| 3987. (இ-ள்) ஆன செயல்முறை.....நாளில் - அவ்வாறாயின செயலினைமுறையாகச் செய்வாராகிய நாயனார்; ஒரு திருவாதிரை நாளில்....பொழுதில் - ஒரு திருவாதிரை நாளிலே மேன்மையுடைய சிவநெறித் திருத்தொண்டர்களுக்கு விளங்கிய பொன்கொடுக்கும் போது; மானநிலை....மேனியராய் - மானநிலை அழியும் தன்மை வரும் காமக்குறிகள் தெரியும் குற்றம் பொருந்திய மேனியை யுடையவராய்; ஒருவர்....அணைந்தார் - ஒருவர் திருநீற்றினை அணிந்து வந்தணைந்தனர். 5 |
| இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன. |
பெருந்தகையார் - அகல - அடைவார் (3984) - காத்து - ஆற்றிச் செல்கின்றார் (3985) - மேவி அளித்து - நுகர்விப்பார் (3986) - இடும் பொழுதில் - ஒருவர் - அணைந்தார் (3987) என்று முடித்துக் கொள்க. |
3984. (வி-ரை) முனையர் - முனையதரையர் என்னும் குறுநில மன்னர் மரபு. |
தென்முனைகள் - பகைவர்களது போர். “தெவ்வுப் பன்மை” |
அகல - அகலச்செய்து; அகற்றி; அகல - அடைவார் என்று கூட்டுக. |
தொண்டுபுரி அம் முனைவர் - தொண்டர்கள்; அகரம் பண்டறிசுட்டு; முனைவர் - முதல்வர்கள்; அவர்களே தலைவராதற்குரியவர் என்ற கருத்து. “அகில காரணர் தாள்பணி வார்கடாம், அகில லோகமு மாடற் குரியர்” (139) என்றது காண்க. தலைமைபற்றிச் சூலமுதற் படையென்றார். |
அடியடைவே பேறு - அடைதலே பெரும் பேறாகும். இப்பாட்டுத் திரிபு என்ற சொல்லணி கொண்டது. அடைவு - தொழிற்பெயர். |
3985. (வி-ரை) திருச்செல்வம் பெருக்கும் நெறி யனவிடை - திருச்செல்வம் - கோயிற்செல்வமாவன - வழிபாட்டுச் சிறப்புக்களும், அவற்றுக் காதாரமாக உள்ள ஏனைச் செல்வ நிலைகளும் ஆம்; திரு - சிவசம்பந்தமான ஐசுவரியம். |
நெறி அன இடை - நெறியில் வருவனவாகியவற்றின்கண்; இடை - ஏழனுருபு. |
ஆருயிர்....காத்து - சிவச்செல்வமாகிய நெறிகளைப் பெருக நிகழ்வித்தற்கண் தமது உயிர் துறக்க நேரிட்டாலும் பொருட்படுத்தாது அச் சிவச் செல்வத்தையே காத்து அதனை உயிரினும் மேலானதாகக் கருதி இறைவர் ஆலயத்திற் குறைவுறின் உயிர் விடநேரினும் அவைகாத்து உயிர்விடுவோர் சிவபுரியிற் சேர்வர் என்பது ஆகமவிதி; “சங்கரனாலயத்திற் றவறுறினே சாகத்துணிந்தழிகை பாங்கே, யவரமலன் புரியதனைச் சார்வர்” (சிவதருமோ). |
மனவு - மனவுமணி - பாசி; (சோகி என்பர்.) அக்குமணியுமாம். |
ஆமைத்தொடையல் - ஆமையோட்டாலாகிய மாலை; மனவிடை...மார்பர் - சிவபெருமான்; இடை - இடையிலே. தொறு - எஞ்சாமைப் பொருள் தருவதோர் இடைச்சொல். |
கனவிடையாகிலும் வழுவாக்கடன் - நனவினில் வழுவாதியற்றுதலே யன்றிக் கனவினும் வழுவாமல் கடமை பூண்டு. |
| இப்பாட்டும் திரிபு என்ற சொல்லணியுடையது. 3 |