பக்கம் எண் :

பெரியபுராணம்267

     மனங்கொள்வார் - காவலனார் நரசிங்கமுனையரையர் என்று கூட்டுக.
முனையதரையர் என்பது முனையரையர் என வந்தது. இது பற்றி முன் (467)
உரைத்தவை பார்க்க. இதனால் நாட்டுச் சிறப்பும், அரசமரபுச் சிறப்பும், அரசர்
பெயரும், பண்பும் கூறப்பட்டன.
 

     மாடாத - குலமரபில் - என்பனவும் பாடங்கள். மாடாத - மாளாத.    1
 

3984. இம்முனையர் பெருந்தகையா ரிருந்தரசு புரந்துபோய்த்
தெம்முனைகள் பலகடந்து தீங்குநெறிப் பாங்ககல
மும்முனைநீ ளிலைச்சூல முதற்படையார் தொண்டுபுரி
அம்முனைவ ரடியடைவே யரும்பெரும்பே றெனவடைவார்
,        2
 
3985. சினவிடையார் கோயிறொறுந் திருச்செல்வம் பெருக்குநெறி
அனவிடையா ருயிர்துறக்க வருமெனினு மவைகாத்து
மனவிடையா மைத்தொடைய லணிமார்பர் வழித்தொண்டு
கனவிடையா கிலும்வழுவாக் கடனாற்றிச் செல்கின்றார்.            3
 
3986. ஆறணிந்த சடைமுடியார்க் காதிரைநா டொறுமென்றும்
வேறுநிறை வழிபாடு விளங்கியபூ சனைமேவி
நீறணியுந் தொண்டரணைந் தார்க்கெல்லா நிகழ்பசும்பொன்
நூறுகுறை யாமலளித் தின்னமுது நுகர்விப்பார்
,                 4
 

3987.   

ஆனசெயன் முறைபுரிவா ரொருதிருவா திரைநாளில்
மேன்மைநெறித் தொண்டர்க்கு விளங்கியபொன் னிடும்பொழுதின்
மானநிலை யழிதன்மை வருங்காமக் குறிமலர்ந்த
ஊனநிகழ் மேனியரா யொருவர்நீ றணிந்தணைந்தார்
.            5
 

     3984. (இ-ள்) இம்முனையர் பெருந்தகையார்...அகல - இந்த முனையர் மரபின்
பெருந்தகையாராகிய அரசர் தமது நகரிலிருந்து அரசளித்துப், பகைவர்களின் போர்கள்
பலவற்றையும் வென்று, தீமையாகிய நெறிகளின் செயல்கள் எல்லாம் நீங்க; மும்முனை
நீள்.....அடைவார் - மூன்று முனைகளையுடைய நீண்ட இலைவடிவினைதாகிய சூலமாகிய
முதன்மை பெற்ற படையினை ஏந்திய இறைவரது திருத்தொண்டு புரிகின்ற அந்த
முதல்வர்களாகும் அடியவர்களின் திருவடிகளை அடைவதுவே அரிய பெரிய பேறு
என்று அடைவாராய்,                                               2
 

     3985. (இ-ள்) சினவிடையார்.....நெறியன இடை - சினம் பொருந்திய

விடையினையுடைய இறைவரது திருக்கோயில்கள் தோறும் திருச்செல்வங்களைப்
பெருகச் செய்யும் நெறியாகியவற்றின்கண்; ஆருயிர்...காத்து - அரிய உயிரை
விடவந்தாலும் அந்நெறிகளைக் காவல் புரிந்து; மனவிடை....வழித்தொண்டு - மனவு
மணிவடங்களினிடையே ஆமையோட்டை அணிந்த மார்பினையுடைய இறைவரது
வழித்தொண்டினை; கனவிடையாகிலும்......செல்கின்றார் - கனவிலேயும் பிறழாது
கடமைபூண்டு செய்துவருகின்றாராகி;                                   3
 

     3986. (இ-ள்) ஆறணிந்த....மேவி - கங்கையாற்றினைத் தரித்த
சடையினையுடையமுடியாராகிய சிவபெருமானுக்குத் திரு ஆதிரை நாள்தோறும்
நித்தியமாக