பக்கம் எண் :

பெரியபுராணம்291

     3. பரதவர் குலவியல் தொழிலாகிய மீன்கொலை வலைத்தொழில் செய்து
நின்றவாறே சிவனடிமைத் தொண்டும் அதற்கேற்றவாறு செய்யலாம் (4002);
 திருநாளைப்போவார் நாயனார் வரலாறு பார்க்க.
 
     4. நாளும் ஒருமீன் சிவனுக்கென்று கடலில் விடுதலும் சிவத்தொண்டாகும்.
 
     5. அந்நியமத்தில் ஒருநாள் ஒருமீனே வரினும் விட்டுவருதலும், அதனால்
செல்வங் குறைந்து அருங் கிளை சாம்புதலும், உணவின்றித் தமது மேனி தளர்வுறுதலும்
கண்டும், அவ்வாறே கிடைத்த ஒரு மீனை விட்டு மகிழ்ந்து வருதல் அன்பின்
உறைப்பினாலாகியது. (4003 - 4004)
 
     6. அத்தகைய துன்பநிலையில் உலகடங்கலும் விலைபெறும் பொன்மயமாய்
நவமணி உறுப்புடன் உதயசூரியன் போலச் சுடர்விடும் மீன் ஒன்று பட, அதனையும்
சிவன்கழற்கென விடுத்தல் பொருட்பற்றினை அடியோடு எறியும் செயலாகும்.
 
     7. பொருட்பற்று விடுதல் மிக அருமை. இந்நாள் உலகம் பொருட்பற்றே பற்றாக
அலைந்தும் அலைத்தும் வருதல் ஈண்டுக் கருதத்தக்கது.
 
     8. பற்றற்ற வழியே இறைவர் வெளியிட்டருளுவர்.
 
     9. மண் பெண் பொன் என்ற ஏடணை மூன்றனுள் (ஏடணாத்திரயம்)
பொருட்பற்று மிகக் கடினமாய்ப் பற்றுவது. உலக முழுவதும் பொருள் முதற்றாம்
என்பது ஒரு தடுக்கலாகாத பழமொழி. அதனை முழுதும் வென்றவர்கள் அன்பின்
உறைப்புடைய பெருமக்கள்.
 
     தலவிசேடம்: நாகப்பட்டினம் - III - பக்கம் - 461 பார்க்க.
 

அதிபத்த நாயனார் புராணம் முற்றும்.

_ _ _ _ _