பக்கம் எண் :

பெரியபுராணம்347

 
ஆடரவங் கச்சா வரைக்கசைத்த வம்மான்றன்
பாடரவங் கேட்ட பகல்                                23
 
     (இ-ள்) கூற்றுதைத்தான்....பகல் - இயமனை உதைத்தவரும் ஆடுகின்ற
பாம்பினைக் கச்சாக இடையிலே கட்டிய அம்மானாரும் ஆகிய சிவபெருமானது
பாடலாகிய வேத கீதத்தினைக் கேட்ட ஒரு பகலின் விளைவுக் கீடாகிய பயனாக :
நூற்றனைத்தோர்....விளையாதே - நூற்றுக் கணக்காகிய பல ஊழிகாலம் நுண்ணிய வயிர
வெண்குடையின் நிழலின் கீழே வீற்றிருந்து அரசாண்ட அரசச் செல்வம் பெற்றபயன்
விளையாது.
 
     (வி-ரை) அனைத்து - அளவு; ஊழி - நீண்ட கால அளவு - யுகம் என்பர்;
வயிர வெண்குடை - வயிரம் போன்று ஒளி விளங்கும் வெண்கொற்றக்குடை;
வயிரமணிகள் வரிசை பெறக் கட்டிய என்றலுமாம்; குடைக்கீழ் வீற்றிருந்த செல்வம்
- அரசச் செல்வம். விளையாது - ஈடாக உளதாகாது.
 
     பகல் - சிறு கூறாகியபோது என்ற பொருளில் வந்தது.
 
     நூற்றனைத் தோர் பல்லூழி - என்பது காலநீட்டிப்பின் பேரெல்லையும், பகல்
காலத்தின் சிற்றெல்லையும் குறித்தன; பகலின் பயன்ஊழிச் செல்வத்தினாலும் வாராது
என்றபடி; இவ்வாறன்றி ஒரு பகற்கேட்ட பயனாக ஊழி அரசச் செல்வம் விளையும்
என்பாரு முண்டு; இப்பொருளில் விளையாதே - ஏகாரம் வினா; அரசச் செல்வத்தை
ஒரு பொருளாகக் கொள்ளாது துறந்தவர் இந்நாயனார் ஆதலின் இப்பொருள்
சிறப்பின்று; பாடு அரவம் - பாட்டு - வேத நாதம்; பாட்டு - வேதம்; பாட்டரவம்
என்பது எதுகை நோக்கிப் பாடரவம் என நின்றது. "வீடகத்தே புகுத்திடுவான்" (திருவா
- சத - 11) என்புழிப் போல.                                       23
 
24.      திருமயானம் (திருக்கடவூர் மயானம்?)
 

 

"உய்யு மருந்திதனை யுண்மி" னெனவுற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் - பைய
வெழுந்திருமி "யான்வேண்டே" னென்னாமுன் னெஞ்சே
செழுந்திரு மயானமே சேர்.                                    24
 
     (இ-ள்) உய்யும்....காட்டியக்கால் - "இஃது உய்விக்கும் மருந்து; இதனை
உண்ணுங்கள்" என்று சொல்லி உற்றார்கள் கையினைப் பிடித்து எதிரே காட்டியபோது;
பைய....என்னாமுன் - மெல்ல எழுந்து இருமி எனக்கு இது வேண்டாம் என்று
சொல்லும் நிலை வாராமுன்னே; நெஞ்சே....சேர் - நெஞ்சமே செழிப்புடைய
திருமயானத்தை நீ அடைவாயாக.
 
     (வி-ரை) "உய்யும் - உண்மின்" என - இது மருந்தினை உண்பிப்பதற்காக
உற்றார் கூறும் ஊக்கமொழி; நோய் மிகுதியாற் கிடப்போர் உயிர் வாழ்க்கையினை
வெறுக்குமியல்பு சார்தல் பற்றி உற்றார் இவ்வாறு ஊக்கப்படுத்துதல் வழக்கு: உய்யும் -
உய்விக்கும்; பிறவினை; கையைப் பிடித்து எதிரே காட்டுதல் - நோய் மிகுதியாற்
கண்மூடிக்கிடக்கின்றாராதலின் கையைப் பிடித்து மருந்தினைக் காட்டுதல்
வேண்டப்பட்டது; பைய எழுந்து - மெல்ல எழுதல், மாட்டாமைக் குறிப்பு; இருமி -
எழுகின்ற முயற்சிதானும் இருமலை விளைக்கும்படி நோய் முற்றிய