பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்346

குதட்டாத முன்னே; புரமூன்றும்....ஏத்து - முப்புரங்களையும் தீயம்பினால் எரித்த
இறைவரும், திருப்பனந்தாளின்கண் உள்ள தாடகை யீச்சரத்தில் எழுந்தருளிய
இறைவரும் ஆகிய சிவபெருமானது பாதத்தினையே போற்றுக.
 
     (வி-ரை) கரம் ஊன்றுதல் முதலாகிய ஐந்தும் மூப்பின் குறிகள்; கரம்
ஊன்றுதல்
- உடலைப் பொறுக்கலாற்றாது கையூன்றுதல்; கண் இடுங்குதல் - கண்
குழிதல்; கால் குலைதல் - கால்கள் நடக்கலாற்றாது பின்னித் தடுமாறுதல்; மற்றோர்
மரம்
- ஊன்று கோல்; மற்று ஓர் - கை ஊன்றுதலுடன் மேலும் ஒரு; குதட்டுதல் -
பற்கள் விழுந்துவிட்டமையால் வாய் குதட்டி மொழிதல்; உண்ணுதல்; தீச்சரம் -
தீயினைக் கூராக உடைய அம்பு; தாடகைய ஈச்சரம் - திரைுப்பனந்தாளின் கண்
உள்ள கோயில். பனந்தாள் - பதி; சோழநாட்டுக் காவிரி வடகரை 36-வது பதி.
 
22.     திரு ஒற்றியூர்
 
    

 

தஞ்சாக மூவுலகு மாண்டு தலையளித்திட்
டெஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சங்
கரந்துண்ட கண்டர்தம் மொற்றியூர் பற்றி
யிரந்துண் டிருக்கப் பெறின்.                                  22
 
     (இ-ள்) நஞ்சம்....பெறின் - விடம் மறைந்து இருக்கும்படி அமுது செய்த
கழுத்தினையுடைய இறைவரது திருவொற்றியூரினைப் பற்றுக் கோடாகக் கொண்டு
அங்கே பிச்சை யேற்று உண்டு வாழ்ந்திருக்கும் பேறு பெற்றால்; தஞ்சாக...வேண்டேன்
- தம்பால் ஒப்படைக்கப் பெற்ற அடைக்கலப் பொருளாகக் கொண்டு
மூன்றுலகங்களையும் ஆட்சிபுரிந்து காத்துக் குறைவின்றிப் பெற்றாலும் அதனை யான்
விரும்பமாட்டேன்.
 
     (வி-ரை) பெறினும் - வேண்டேன் - என்று கூட்டுக.
 
     தஞ்சாக - அடைக்கலப் பொருளாக; மூவுலகு - மேல் கீழ் நடு என்ற மும்மை
உலகங்கள்; தலையளித்தல் - காத்தல்; எஞ்சாமை - குறை வில்லாமை; கரந்து -
மறைந்துறையும்படி; கரந்திட - என்க. பற்றி - பற்றுக்கோடாகக் கொண்டு; "முடியரசர்
செல்வத்து மும்மை....தொண்டுபட்டு, ஓடேந்தி உண்ப துறும்" (10) என்ற கருத்து.
இக்கருத்து முடியரசராகிய ஒருவர் திருவுள்ளத்தினின்றும் போந்தமையின் மிக்க
வலிமையும் சிறப்புமுடையது என்றெடுத்து நம்பியாண்டார் நம்பிகள் திருவந்தாதியுட்
(56-ல்) போற்றியமை காண்க. இக்கருத்து ஐயடிகள் திருவுள்ளத்தே உறைத்து
ஊன்றியிருந்தமை அவர் தமது முடி அரசைப் பொருளாகக் கொள்ளாது
துறந்தமையாலும், முன் சொன்னதன்றி, ஈண்டு, மேலும் வற்புறுத்திக் கூறியவாற்றாலும்
கருதப்படும். மேற் பாட்டும் பார்க்க.
 
     இருத்தல் - ஈண்டு வாழ்தல் என்னும் பொருட்டு.
 

     ஒற்றியூர் தொண்டை நாட்டில் 20-வது பதி. பட்டினத்தார் வரலாறும்,
திருவாக்குக்களும் ஈண்டுக் கருதத் தக்கன.                           22
 

23.     பொது
 
 
நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்
வீற்றிருந்த செல்வம் விளையாதே - கூற்றுதைத்தான்