தலைவர்களாலும், எயில் கோட்டத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம் இருபத்துநாலு கோட்டங்களுக்கும் பொதுத்தலைமை அதிகாரியாலும் ஆளப்பட்டு வந்தன. தொண்டை நாடு வேளாளர்களால் ஆளப்பட்டு வந்தாலும், பாதுகாப்பு (Defence), போக்குவரத்து (Communication), அந்நிய அரசியல் தொடர்பு (Foreign countries connection) இம்மூன்றும் சோழ அரசர்களால் வகிக்கப்பட்டன. |
24 கோட்டங்களில் களத்தூர்க் கோட்டமும் ஒன்று. அக்கோட்டத்தைக் கூற்றுவனாயனாருடைய மூதாதைகள் சுதந்திரமாக கி.மு. முதல் நூற்றாண்டு முதல் ஆண்டு வந்தார்கள். களத்தூர்க் கோட்டத்துக்குச் சேர்ந்த நாடுகள் நான்கு. அவை யாவன :- (1) குறும்பறைநாடு, (2) வல்லிபுரம் நாடு (வல்லம்), (3) பாத்தூர் நாடு, (4) திம்மூர் (நடு) நாடு என்பன. அக்கோட்டத்துக்குச் சேர்ந்த நத்தங்கள் 90 ஆகும். |
கூற்றுவநாயனாரும் அவர் மூதாதைகளும் தொண்டை மண்டலம் கொண்டை கட்டி வேளாள மரபினர் ஆவர். தொண்டை மண்டல வேளாளருக்கு 12000 கோத்திரங்கள் உண்டு என்பதனை இரண்டாம் கரிகாலன் கொடுத்த செப்பேட்டுப் பட்டயத்தால் அறியலாம். அப்பட்டயம் காஞ்சிபுரம் ஞானப்பிரகாசர் மடத்தில் இன்றும் உள்ளது. அதனுடைய நகல் ஒன்று என்னிடமும் உள்ளது. அப் பன்னீராயிரம் கோத்திரங்களில் கூற்றுவநாயனார் களப்பாள கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பது, "ஓதம் தழுவிய ஞாலமெல் லாம்ஒரு கோலின்வைத்தான், கோதை நெடுவேற் களப்பாள னாகிய கூற்றுவனே" என்று திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பியாண்டார் நம்பிகள் கூறுமாற்றால் அறியலாம். |
| 3. கூற்றுவநாயனாருடைய கோட்டம் - நாடு - நத்தம் |
கூற்றுவநாயனாருடைய கோட்டம் களத்தூர்க்கோட்டம் |
| | ” ” ” | நாடு ஊர்நத்தம் கோத்திரம் | களத்தூர் நாடு களத்தூர் களப்பாளர் |
கூற்றுவநாயனாருடைய தாய்தந்தையர் பெயர்கள் தெரியவில்லை. சேக்கிழாரும் கூறவில்லை. நம்பியாண்டார் நம்பிகள் கூறிய கோத்திரப் பெயரைக்கூடச் சேக்கிழார் கூறவில்லை. அதற்குக் காரணம் விளங்கவில்லை. |
| 4.களத்தூர் |
கூற்றுவநாயனார் களத்தூரில் பிறந்தவர். களத்தூருக்கு ”பொற் களந்தை“ என்றும், “பொன் விளைந்த களத்தூர்” என்றும் பெயர்கள் உண்டு, களந்தை என்பது ஒத்திவாக்கம் என்னும் (S.R.) தென்னாட்டுத் தொடர்வண்டி நிலையத்துக்கு அருகில் உள்ளது. களத்தூர் காஞ்சிபுரத்துக்குத் தென்கிழக்கில் 30 கல் தொலைவில் உள்ளது. இரண்டாம் கரிகாலன் கொடுத்த பட்டயப்படி களப்பாளர் கோத்திரத்தார் தமிழ்உடையார் கோத்திரத்தார், பெருவிளக்கர் கோத்திரத்தார் ஆகியோர் களத்தூரில் வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது, “ மாலார் களந்தைப் புகழேந்தி” - “ஐயன் களந்தைப் புகழேந்தி” - “காரார் களந்தைப் புகழேந்தி” - “நிமிர் களந்தைவரு புகழேந்தி” என்னும் வாக்கியங்களை நோக்க, தமிழ் உடையார் கோத்திரத்தைச் சேர்ந்த, கொண்டை கட்டி வேளாளரான புகழேந்தியும் பிறந்தது களத்தூரே ஆகும். |
கொங்கு நாட்டில் “பெரிய களந்தை" என்னும் ஊரும், அவ்வூரில் திருவிசைப்பா பாடல் பெற்ற “ஆதித்தேச்சுரம்” என்னும் சிவன் கோவிலும் உண்டு. |