| பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம் | 356 |
ஆனால், கூற்றுவநாயனார் பிறந்த களந்தை ‘ பெரிய களந்தை’ அல்ல என்பது வெளிப்படை. | 24 கோட்டங்களில் களத்தூர்க் கோட்டமும் ஒன்று. அக்கோட்டத்தைக் கூற்றுவனாயனாருடைய மூதாதைகள் சுதந்திரமாக கி.மு. முதல் நூற்றாண்டு முதல் ஆண்டு வந்தார்கள். களத்தூர்க் கோட்டத்துக்குச் சேர்ந்த நாடுகள் நான்கு. அவை யாவன :- (1) குறும்பறைநாடு, (2) வல்லிபுரம் நாடு (வல்லம்), (3) பாத்தூர் நாடு, (4) திம்மூர் (நடு) நாடு என்பன. அக்கோட்டத்துக்குச் சேர்ந்த நத்தங்கள் 90 ஆகும். | | 5. வேளாளர் | தொண்டைமண்டலம் கொண்டைகட்டி வேளாளர் குறுநிலமன்னர்களாக இருந்ததால் அவர்களுக்குப் பத்து அங்கங்கள் (தசாங்கங்கள்) உண்டு. அவை வருமாறு; | | வேளாளர் தசாங்கள்கள் | கூற்றுவநாயனார் களத்தூரில் பிறந்தவர். களத்தூருக்கு ”பொற் களந்தை“ என்றும், “பொன் விளைந்த களத்தூர்” என்றும் பெயர்கள் உண்டு, களந்தை என்பது ஒத்திவாக்கம் என்னும் (S.R.) தென்னாட்டுத் தொடர்வண்டி நிலையத்துக்கு அருகில் உள்ளது. களத்தூர் காஞ்சிபுரத்துக்குத் தென்கிழக்கில் 30 கல் தொலைவில் உள்ளது. இரண்டாம் கரிகாலன் கொடுத்த பட்டயப்படி களப்பாளர் கோத்திரத்தார் தமிழ்உடையார் கோத்திரத்தார், பெருவிளக்கர் கோத்திரத்தார் ஆகியோர் களத்தூரில் வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது, “ மாலார் களந்தைப் புகழேந்தி” - “ஐயன் களந்தைப் புகழேந்தி” - “காரார் களந்தைப் புகழேந்தி” - “நிமிர் களந்தைவரு புகழேந்தி” என்னும் வாக்கியங்களை நோக்க, தமிழ் உடையார் கோத்திரத்தைச் சேர்ந்த, கொண்டை கட்டி வேளாளரான புகழேந்தியும் பிறந்தது களத்தூரே ஆகும். | கொங்கு நாட்டில் “பெரிய களந்தை" என்னும் ஊரும், அவ்வூரில் திருவிசைப்பா பாடல் பெற்ற “ஆதித்தேச்சுரம்” என்னும் சிவன் கோவிலும் உண்டு. | 1. பெயர் வேளாளர் 2. ஆறு கங்கை 3. மலை மேரு 4. நாடு தொண்டைநாடு 5, நகர் காஞ்சிபுரம் 6. வாகனம் ஐராவதம் (யானை) உச்சைச்சிரவம்(குதிரை) 7. மாலை செங்குவளை 8. கொடி பேழி-குயில்-சிங்கம் 9. படை கலப்பை 10, முரசம் கொடை வேளாளருடைய அறுதொழில் 1. உழவு 2. பசுக்காத்தல் 3. பொருளீட்டல் 4. ஈதல் 5. ஓதல் 6. வேட்டல் வேளாளர் இயல்பு (As per Rottler's Tamil and English Dictionany) 1. ஆணைவழி நிற்றல் 2. அழிந்தோரைக் காத்தல் 3. கைக்கடனாற்றல் 4. கசிவகத்துண்மை 5. ஒக்கல் போற்றல் 6. ஓவா முயற்சி 7. மன் இறைதருதல் 8. ஒற்றுமை கோடல் 9. விருந்தோம்பல் 10. திருந்திய ஒழுக்கம் 6. கூற்றுவ நாயனார் பிறப்பு வளர்ப்பு கூற்றுவ நாயனார் களப்பாளர் கோத்திரத்தில் களத்தூரில் பிறந்தவர். ஆனால் இவரடைய தகப்பனாரும் மூதாதைகளும் களத்தூர்க் கோட்டத்தை அரசுபுரிந்த ஒரு குறுநில மன்னர் ஆவர். அதனாலேதான் உமாபதிசிவாசாரியர் இவரைக் குறுநில மன்னர் ஐவரில் ஒருவராகச் சேர்த்தி உள்ளார்;- “குறுநில மன்னர் ஐவர் நரசிங்க முனையர் கூற்றுவனார் - கழற்சிங்கர் மெய்ப் பொருள் ஐயடிகள்” - சேக்கிழார் புராணம் களத்தூர்க் கோட்டத்தைக் கூற்றுவநாயனார் மூதாதைகள் இரண்டாம் கரிகாலன் காலம் முதற்கொண்டு பரம்பரையாக ஆண்டு வந்துள்ளார்கள். கூற்றுவநாயனாருடைய பெற்றோர்களுக்கு வெகுகாலம் பிள்ளைப்பேறு இன்மையால், கூற்றுவனைக் குமைத்த கோனாகிய சிவபெருமானைக் குறித்துத் தவம் கிடந்தார்கள். அவர்களுடைய தவத்தின் பயனாக நம்கூற்றவ நாயனார் பிறந்தார். பிறந்தவுடன் பெற்றோர்கள் பிறப்பின் குறிப்பு எழுதுதல் (ஜாதகர்மம்), பெயரிடுதல் (நாமகரணம்) முதலிய கடமைகளைச் செய்து, தானதருமங்களைச் செய்தார்கள். பெற்றோர்கள் இட்டபெயர் கூற்றுவன் என்பது. கூற்றுவன் என்பது சிவனுடைய காரணப் பெயர்களில் ஒன்று, Vide- “கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண் (அப்பர் சுவாமிகள்). | | |
|
|