பக்கம் எண் :

கறைக்கண்டன் சருக்கம்388

     (இ-ள்) நீடு வேலை - பெரியகடல்; தன்பால்...சேமவைப்பாமென - தன்னிட
முள்ள மணி முதலிய நிதிகளை வைத்திடுதற்குத் தேடிப் பெற்றதொரு பெரிய
பண்டாரம் இது என்று சொல்லும்படி; ஆடு...செப்பினால் - ஆடுகின்ற அழகிய
கொடிகளையுடைய அப்பதியின் பக்கங்களில் மரக்கலங்களாகிய சிமிழினால் தள்ளும்.
 

     (வி-ரை) வேலை - தள்ளும் என்று இயைக்க. தேடும் - தேடிய;
     தன்பால் நிதி - வைத்திடச் - சேமவைப்பாம் என - தன்னிடமுள்ள நிதிக்
குவைகளை எல்லாம் சேர்த்துக் காவல் பொருந்தச் சேமித்து வைக்கும் இடம்
இதுவேயென்று, கடல், தேடி இதனிடத்துத் தள்ளும் என்பது தற்குறிப்பேற்ற அணி;
கடல் படு பண்டங்கள் வாணிபத்துறையில் இங்கு மிக்கிருந்தன என்பதாம்; மயிலை
நகர்ச் சிறப்பு முன் ஆளுடைய பிள்ளையார் புராணத்தினுள்ளும்,
திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்துள்ளும், உரைத்தவை பார்க்க.
 
     வேலை தன்பால் நிதி - பவளம் முத்து முதலிய மணிகளும் சங்கு
முதலியவைகளும் முதலாகக் கடல்படு நிதியங்கள். தன்பால் - தன்பாலின் உள்ள;
சேமவைப்பு - பண்டாரம். பொக்கிசம் என்பர். சேமவைப்பு - இரு பெயரொட்டுப்
பண்புத் தொகை.
 
     செப்பு - சிமிழ்; மணிகளைச் சிமிழில் வைக்கும் இயல்பு கருதி அவற்றைக்
கொணரும் மரக்கலங்களைச் செப்பு என்று உருவகித்தார்.
 
     மாடுதள்ளும் - தள்ளும் என்ற இலேசினால் செல்வச் செழிப்பும்,
மரக்கலங்களினின்றும் பண்டங்களைத் தள்ளி எடுக்கும் இயல்பும் குறிக்கப்பட்டன.
மாளிகைமாடு - கடற்கரையின் மாளிகைகள் கலப்பண்டங்களை நேரே தள்ளக்
கொள்ளும் தன்மையி்ல் அமைந்துள்ளன என்பது குறிப்பு; (docks - yards); “மரக்கல
மனைப்படப் பணைக்கரை நிரைக்கும்” (1932) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க.
                                                                    2
 
4081.     கலஞ்சொ ரிந்த கரிக்கருங் கன்றுமுத்
தலம்பு முந்நீர் படிந்தணை மேகமு
நலங்கொள் மேதிநன் னாகுந் தெரிக்கொணா
சிலம்பு தெண்டிரைக் கானலின் சேணெலாம்.                        3
 
     (இ-ள்) சிலம்பு....சேணெலாம் - ஒலி்க்கின்ற தெளிந்த அலைகளையுடைய
கடற்கரைக்கானலில் பரந்த நில முற்றும்; கலம்...கன்றும் - (அயல் நாடுகளி னின்றும்
கொணர்ந்து) மரக்கலங்கள் இறக்கிய யானைக்கன்றுகளும்; முத்து.....மேகமும் -
முத்துக்களைக் கொழித்து ஒதுக்கும் கடலிற் படிந்து அணைகின்ற மேகங்களும்; நலம்
கொள்....நாகும் - செழிப்புடைய எருமைக்கன்றுகளும்; தெரிக்கொணா - நிற
ஒப்புமையினால் வேறுபிரித் தறியக் கூடாவாம்.
 
     (வி-ரை) கலம்..கரிக்கருங்கன்று - மலைநாடு முதலாகிய அயல்நாடுகளினின்றும்
யானைக்கன்றுகள் கப்பல் வாணிக முகத்தாற் கொண்டுவரப் படுகின்றன என்னும்
செல்வச் செழுமையுணர்த்துதல் இப்பாட்டின் கருத்து. “வேழ முடைத்து மலைநாடு”
 
     முத்தலம்பு முந்நீர் - முத்துக்களைக் கரையிற் கொழிக்கும் கடல்; முந்நீர் -
கடல்; ஆக்கல் - அளித்தல் - அழித்தல் என்ற முத்தொழிலும் செய்தலாற் போந்த
காரணப் பெயர் என்பர்.
 
     முத்தலம்பு......மேகம் - சிப்பிகளின் அகட்டில் மேக நீர்த்துளி வீழ்ந்தவையே
முத்தாய் விளையும் என்பதொரு மரபு; அவ்வாறு தம்மாலாக்கப்பட்ட முத்துக்களைக்