பக்கம் எண் :

கறைக்கண்டன் சருக்கம்390

ஓதி யெங்கு மொழியா வணிநிதி
பூதி யெங்கும் புனைமணி மாடங்கள்.                            5
 
     (இ-ள்) வீதி எங்கும் விழா அணி - வீதிகளில் எவ்விடத்தும் திருவிழாக்களின்
அலங்காரங்களாம்; காளையர் தூதியங்கும்...ஓதி யெங்கும் - காளையர்களின் தூதாக
இயங்குவனபோல உள்ள வண்டுகள் பெண்களின் கூந்தல்களிலெங்கும் ஆம்;
பூதி....மாடங்கள் - சுண்ணச்சாந்து பூசி அலங்கரிக்கப்பட்ட மாடங்களில் எங்கும்; ஒழியா
அணிநிதி - அழகிய நிதிகளும் அணிகளும் நீங்காதுள்ளன.
 
     (வி-ரை) விழாவணி - திருவிழாக்களின் பொருட்டுச் செய்யும் அலங்காரங்கள்.
 
     எங்கும் - என்ற மூன்றிடங்களிலும் உள்ளன என்க. 78 முதல் 83 வரை
பாட்டுக்கள் பார்க்க.
 
     அணி - இம்மூன்றிடங்களிலும் அணி உள்ளன என்பது.
 
     காளையர் - காளைபோன்ற இளைஞர்கள். தோகையர் - மயில்போன்ற
பெண்கள். “தளிரடிமென் னகைமயிலைத் தாதவிழ்தார்க் காளைக்கு” (1727).
 
     தூது இயங்கும் - தூது போல அசையும்; காளையர்களால் தரப்பட்ட
மலர்களைக் கூந்தலின் அணிதலால் அதில் மொய்க்கும் வண்டுகள் அவர்களது தூது
போல இயங்குகின்றன; “தாதுநின் றூதப் போய்வருந் தும்பிகா ளிங்கே.....மணியம்
பலவனைக் கண்டென் மனத்தையுங் கொண்டுபோ துமினே” (திருவிசைப்பா.....கருவூர் -
கீழ்க் - மணி - 3) ஓதி - கூந்தல்.
 
     காளையர் - தோகையர் - தூதியங்கும் - என்றதனால் இவரிருப்பிடங்களின்
அணிமை குறிப்பிற் கூறப்பட்டது; காளையர் பொருட்டு ஊடல் தீர்க்கத் தலைவியரிடம்
தூது செல்லும் தோகையர் என்றுரைப்பாரும்; பெண்களின் ஞதிகளில் அணி ஒழியா
என்று கூட்டி உரைப்பாரும்; வீதி யெங்கும் விழவணியும் காளையர்களும்
தோகையர்களும் அணி நிதிகளும் மாடங்களும் உள்ளன என்றுரைப்பாரும் ஆகப்
பலதிறத்தினர் உரையாசிரியர்கள். தூதாக விடுக்கப்படும் பொருள்களுள் வண்டும்
ஒன்று.
 
     பூதி - சுண்ணச்சாந்து; பூதி - திருநீறு என்று கொண்டு அணிநிதி என்னும்
இவ்வுலகச் செல்வமும், (வி)பூதி என்னும் வீட்டுலகச் செல்வமும் மாடங்கள் எங்கும்
நிறைந்துள்ளன என்றலுமாம். பூதி - சிவச்செல்வம்.
     இவ்வாறு பலதிறச் சுவைபட உரைக்க நின்ற ஒப்பற்ற அணிநலம் படைத்தது
இப்பாட்டின் கவிநயம். எங்கும் என்ற முடிபுகள் மூன்றும், அணி என்பன மூன்றும்
வைத்தலால் மூன்று முடிபாக உரைத்தல் ஆசிரியர் கருத்தென்பது கருதப்படும்.
இக்குறிப்பு இராமநாதச் செட்டியார் குறிப்புரையினும் கண்டது.                 5
            
 
4084. மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்
நன்மை சான்ற நலம்பெறத் தோன்றினார்
தன்மை வாயிலா ரென்னுந் தபோதனர்.                             6
 
     (இ-ள்) மன்னு........மாநகர் - நிலைபெற்ற சிறப்பினையுடைய திருமயிலாபுரி
என்னும் இப்பெருந்திரு நகரிலே; தொன்மை...தோன்றினார் - பழமையால் நீண்ட
சூத்திரரென்னும் பழங்குலமானது நன்மைக ளெல்லாவற்றுள்ளும் சிறந்த நலம்