(இ-ள்) ஆன......பெயராக - முன்கூறிய அவ்வாறாயின செயலினாலே அப்பதிக்குத் திருவானைக்கா என்று பெயர் ஆயினதாக; ஞானமுடைய ஒரு சிலந்தி - ஞானம்பொருந்திய ஒரு சிலந்திப்பூச்சி; நம்பர்......புரிந்துளது - இறைவரது செம்பொன் போன்ற திருமுடியின்மேல் சூரியவெப்பமும் சருகும் படாதபடி தன்னுட் கலந்த வாயின் நூலினாலே முடிமேல் கட்டும் நல்ல மேற்கட்டிபோல விரிவுடையதாய் நெருங்கச் செய்தது;( ஆல் -அசை) |
(வி-ரை) ஆனசெயல் - முன்பாட்டிற் கூறிய அவ்வாறாயின செயல். |
ஆனைக்கா என்று பெயர் ஆக - ஆனை வழிபட்ட காரணத்தால் அப்பெயர் வழங்கியதாக. |
ஞானமுடைய ஒரு சிலந்தி - ஞானம் - சிவன் பணிசெய்யும் ஞானம் - (அறிவு); இது முன்னைத் தவத்தால் - பூர்வ புண்ணியத்தால் - வந்த ஞானம். |
வாய்நூலால் - மேற்கட்டியென - சிலந்தி தன் வாய்நூலால் செறிவுள்ள பந்தல் போல இழைக்க. சருகு உதிராவண்ணம் - திருமுடியின் மேல் அங்குள்ள கானல் மரங்களின் சருகு உதிராதபடி காக்க. |
கலந்த - சிலம்பியின் உடலுட் கலந்துவந்த, கலத்தலாவது உடம்பினுள்ளிருந்து வாய்வழி நூலாக வந்து பின்னரும் அதனை உள் ஒடுக்கிக்கொள்ளும் நிலைகுறித்தது. |
திருமேற்கட்டி - திருமுடியின் மேலே கட்டும் விரிப்பு; இது பட்டு முதலியவற்றாலியல்வது; கட்டி - கட்டப்படுவது; பெயர்; விரிதல் - பரப்பு; செறிதல் - வாய்நூலினால் சருகுகள் புகாதபடி இடைவெளி சிறிதாய் அமைய. |
சிலம்பி - கானில் - என்பனவும் பாடங்கள். 3 |
4200. | நன்று மிழைத்த சிலம்பிவலைப் பரப்பை நாத னடிவணங்கச் சென்ற யானை “யநுசித” மென் றதனைச் சிதைக்கச், சிலம்பிதான் “இன்று களிற்றின் கரஞ்சுலவிற்” றென்று மீள விழைத்ததனை அன்று கழித்த பிற்றைநா ளடல்வென் ளானை யழித்ததால். 4 |
(இ-ள்) நன்றும்......சிதைக்க - நன்றாகச் சிலம்பி இழைத்த வாய்நூல் வலையின் பரப்பினை இறைவரது திருவடியிறைஞ்சச் சென்ற யானை, இஃது “அநுசித” மென்று சிதைக்க; சிலம்பிதான்......இழைத்ததனை - இன்று யானையின் கை சுழன்றதனால் அவ் வலயம் அழிந்ததென்று கருதி, மீண்டும் அதனை இழைக்க, (அதனை); அன்று........அழித்தது - அந்நாள் கழித்த பின்னாளில் வலிய வெள்ளானை அழித்தது - |
(வி-ரை) நன்றும் - நன்றாக; வலைபரப்பு - பரவிய வலையம். அநுசிதம்.....சிதைக்க - அநுசிதம் - வாய் எச்சில்பட்ட நூலால் இழைக்கப்படுதலின் தூய்மையற்ற தென்று கொண்டது. சிதைத்தற்குக் காரணம் கூறியபடி. வாய்நீர் பற்றியது அநுசிதம் என்று கொள்கை பற்றித் திருநீல நக்க நாயனார் சரிதம் காண்க. இவ்வாறு எண்ணித் துணிந்த செயலைச் சிலம்பி தனது நன்மையாகிய கருத்தினால் யானையினது கரம் சுலவியதனாலாகியதென்று எண்ணியது; இன்று - என்ற கருத்துமிது. |
இழைத்ததனை - இழைத்த அதனை என்று பிரித்து உரைத்துக் கொள்க. |
அடல் - தான் அநுசிதம் என்று சிதைத்தனைச் சிலம்பிமீள இழைத்தது கண்டு சினந்து அழித்தது என்பார் அடல் என்ற அடைமொழிதந்தோதினார். 4 |
4201. | “எம்பி ரான்றன் மேனியின்மேற் சருகு விழாமை யான்வருந்தி இம்ப ரிழைத்த நூல்வலய மழிப்ப தே” யென் றுறுத்தெழுந்து |