பக்கம் எண் :

பெரியபுராணம்517

 

    

வெம்பிச் சிலம்பி துதிக்கையினிற் புக்குக் கடிப்ப, வேகத்தாற்
கும்ப யானை கைநிலத்தின் மோதிக் குலைந்து வீழ்ந்ததால்.        5
 
     (இ-ள்) எம்பிரான்றன்.....என்று - எமது பெருமானது திருமேனியின் மேல்
சருகுகள் விழாமைப் பொருட்டு நான் வருந்தி மேற்கட்டியாக இழைத்த
நூல்வலயத்தினை இந்த யானை அழிப்பதா ? என்று; உருத்தெழுந்து.....கடிப்ப -
மிகச்சினந்து எழுந்து மனம்புழுங்கி யானையினது துதிக்கையினுள்ளே புகுந்து கடிக்க;
வேகத்தால்.....வீழ்ந்ததால் - அதன் குடைச்சலினாலே கையைத் தரையில் அடித்து
மோதி நிலைகுலைந்து, வீழ்ந்து இறந்தது; (ஆல் - அசை).
 
     (வி-ரை) எம்பிரான்றன்.....அழிப்பதே - இது யானையின் செயலைப்பற்றிச்
சிலம்பி எண்ணியது. முதலில் கரம் சுலவிற்று என்று நல்ல எண்ணத்தையே கொண்ட
சிலம்பி, மீள மீளச் செய்யக்காணலின் பகைமைச் செயலாகக் கண்டு சினந்தது.
 
     உருத்து எழுந்து வெம்பி - சிலம்பியின் மிகச்சினந்த மனநிலை
 
     துதிக்கையினிற் புக்குக் கடிப்ப - மிகச் சிறியோரும் மிகப் பெரியோரை நிலை
குலையச் செய்யவல்லராகுவர் என்பதுண்மை.
 
     வேகத்தால்.....குலைந்து - வீழ்ந்ததால் - துதிக்கையின் உட்புறம் மூளையின்
அணிமையில் மிக நுட்பமான தசைகளையுடையது; அதில் விளைந்து ஊற்றின் துன்பம்
பெரிதாகலானும், வேறு எவ்வழியானும் அதனைப் போக்கிக்கொள்ளுதல் யானைக்கு
இயலாமையானும் கையைத் தரையில் மோதி நிலைகுலைந்து வீழ்ந்தது.
 
     வீழ்ந்தது - வீழ்ந்திறந்தது; சிலம்பி - சுதைச்சிலம்பி போன்ற பெரும்
சிலம்பிவகை. இது விடத்தன்மையுடைய தாதலின் இறப்பை விளைத்தது என்க.    5
                                           
4202. தரையிற் புடைப்பக் கைபுக்க சிலம்பி தானு முயிர்நீங்க
மறையிற் பொருளுந் தருமாற்றான் மதயா னைக்கும் வரங்கொடுத்து
முறையிற் சிலம்பி தனைச்சோழர் குலத்து வந்த முன்னுதித்து
நிறையிற் புவனங் காத்தளிக்க வருள்செய் தருள நிலத்தின்கண்,         6
 

வேறு
 

4203. தொன்மைதரு சோழர்குலத் தரசனாஞ் சுபதேவன்
தன்னுடைய பெருந்தேவி கமலவதி யுடன் சார்ந்து
மன்னுபுகழ்த் திருத்தில்லை மன்றாடு மலர்ப்பாதஞ்
சென்னியுறப் பணிந்தேத்தித் திருப்படிக்கீழ் வழிபடுநாள்.             7
 
4204. மக்கட்பே றின்மையினால் மாதேவி வரம்வேண்ட
செக்கர்நெடுஞ் சடை முடியார் திருவுள்ளஞ் செய்தலினால்
மிக்கதிருப் பணிசெய்த சிலம்பிகுல வேந்துமகிழ்
அக்கமல வதிவற்றி னணிமகவாய் வந்தடைய,                     8      
 

வேறு
 

4205.    கழையார் தோளி கமலவதி தன்பாற் கருப்ப நாணிரம்பி
விழைவார் மகவு பெறவடுத்த வேலை யதனிற், காலமுணர்