| பழையா “ரொருநா ழிகைகழித்துப் பிறக்கு மேலிப் பசுங்குழவி யுழையார் புவனமொருமூன்று மளிக்கு” மென்ன வொள்ளிழையார், |
4206. | “பிறவா தொருநா ழிகைகழித்தென் பிள்ளை பிறக்கும் பரிசென்கால் உறவார்த் தெடுத்துத் தூக்கு” மென, வுற்ற செயன்மற் றதுமுற்றி யறவா ணர்கள்சொல் லியகால மணையப், பிணிவிட் டருமணியை இறவா தொழிவாள் பெற்றெடுத் “தென்கோச்செங்கண்ணா னோ?” வெண்றாள். |
4202. (இ-ள்) தரையில்.....நீங்க - முன்கூறியபடி நிலத்தில் மோதியதனாலே துதிக்கையினுள்ளே புகுந்த சிலம்பியும் இறக்க; மறையிற் பொருளும்......வரங்கொடுத்து - வேதங்களின் பொருயளாவார் அருள் தரும் முறையின்படி மதமுடைய அந்த யானைக்கும் ஏற்ற வரத்தினைக்கொடுத்து; முறையில்.....அருள் செய்தருள - முறைப்படி சிலம்பியினைச் சோழர் குலத்திலே முன்வந்து பிறந்து நிறுத்தும் முறைப்படி உலகங் காவல் செய்து அரசுபுரியும்படி அருள்புரியவும்; நிலத்தின்கண் - இந்நில உலகிலே. 6 |
4203. (இ-ள்) தொன்மைதரு.......சார்ந்து - பழமையாய் வருகின்ற சோழர் குலத்தில் வந்த அரசனாகிய சுபதேவன் தனது பெருந்தேவி கமலவதியுடனே சார்ந்து; மன்னுபுகழ் ......விழிபடுநாள் - நிலைபெற்ற புகழினையுடைய திருத்தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடுகின்ற கமலமலர்போன்ற திருவடியினைத் தலையார வணங்கித் துதித்துத் திருப்படிக்கீழ் வழிபட்டுவருகின்ற நாளிலே. 7 |
4204. (இ-ள்) மக்கட்பேறு......வேண்ட - மக்கட்பேறு இல்லாமையாலே அரசமாதேவி வரத்தினைவேண்ட; செக்கர் நெடும்.......செய்தலினால் - செவ்வானம் போன்ற நீண்ட சடைமுடியினையுடைய இறைவனார் அதற்கிரங்கித் திருவுள்ளம் பற்றியதனாலே; மிக்க.....வந்தடைய - மிக்க திருப்பணியைச் செய்த சிலம்பியானது குலவேந்தன் மகிழும் தேவியாகிய அக்கமலவதியின் திருவயிற்றிலே அழகிய மகவாக வந்தடைய; 8 |
4205. (இ-ள்) கழையார்.....நிரம்பி - மூங்கில்போன்ற தோளினையுடைய கமலவதியினிடத்தில் கருப்பமுற்றும் நாள்நிரம்பி; விழையார்......அதனில் - விருப்ப முறும் மகவினைப் பெறுதற்கடுத்த நேரத்தில்; காலமுணர்......என்ன - காலநிலையை யறிந்த சோதிடர்கள் ஒரு நாழிகை கழித்துத் குழந்தை பிறக்குமாகில் இப்பிள்ளை இடமகன்ற மூவுலகங்களையும் அரசுபுரியும் என்று சொல்ல; ஒள்ளிழையார் - ஒளி விளங்கும் அணியினை அணிந்த அரசமாதேவி; 9 |
4206. (இ-ள்) பிறவாது.......என - (இப்போது) பிறவாது ஒரு நாழிகை கழித்து என்பிள்ளை பிறக்கும்படி எனது கால்களைப் பொருந்தக் கட்டித் தூக்குங்கள் என்று சொல்ல; உற்ற செயல்மற்றது முற்றி - பொருந்திய அச்செய்கை நிறைவு பெற்று; அறவாணர்கள்......அணைய - சோதிடர்கள் சொல்லிய அக்கால எல்லைசார; பிணிவிட்டு.....எடுத்து - கட்டவிழ்ந்து விடுவிக்க, இறவாதுள்ள அக்கமலவதி அரிய மணிபோன்ற குழந்தையைப்பெற்றுக் கையில் எடுத்து; என்.....என்றாள் - இவன் எனது செல்வக்கோச் செங்கண்ணானோ? என்று பாராட்டினாள். 10 |
இவ்வைந்து பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிவுகொண்டன. |