பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்520

 
     காலம் உணர் பழையார் - கணிதர்கள்; சோதிடர்; பழையார் - பழைமையாகப்
பயின்ற நூலுணர்வுடையோர்.
 
     ஒரு நாழிகை.....அளிக்கும் - இது குழந்தை பிறக்கும் நேரத்தை ஒட்டி அதன்
வாழ்க்கைப்பயன்களை நிச்சயித்துச் சாதகபலன் கூறும்நிலை - “மதியணி
புனிதனன்னாள் மங்கல வணியாற் சாற்றி” (278); “அருக்கன்முதற் கோளனைத்து மழகிய
உச் சங்களிலே, பெருக்கவலி யுடனிற்கப் பேணியநல் லோரையெழத், திருக்கிளரும்
ஆதிரைநாள்” (1920) என்பன முதலியவை காண்க.
 
     ஒள்ளிழையார் - என - என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.
 
     உழையார் புவனம் ஒரு முன்றும் - உழைவூர் - இடமகன்ற; உழை - பக்க
இடம். இடமாவன மேல் நடு கீழ் என்பன; புவனம் ஒருமூன்றும் - மேல் நடு கீழ்
என்ற மூன்றிடங்களில் உள்ள ஏழேழ் உலகங்கள். உழை - மான் என்று கொண்டு,
மானேந்திய சிவனது மூன்று புவனம் என்றலுமாம்.
 
     அளிக்குமாறு - புகழும் அருள்பெற்ற வலியும் செலுத்துதல்.
 
     இப்பசுஞ்குழவி பிறக்குமேல் அது - என்க.                          9
 
     4206. (வி-ரை) பிறவாது மகவுபெற அடுத்தவேளை இப்போதுவரினும், இப்போது
பிறவாமல்.
 
     “என்கால்......தூக்கும்” என - கால்களைக்கட்டி மேலேதூக்கி நிறுவுக என்று
சொல்ல; கால்களை மேனோக்கித் தூக்கிக்கட்டி நிறுத்தலால் நிலம்நோக்கி விழும்
குழவியின் வெளிப்பாடு நிகழ இயலாது தாழ்த்தல் கருத்து.
 
     உற்ற செயல் அது - முற்றி - அவ்வாறே செய்யலுற; அச்செயலைச் செய்தனர்
என்று தானும் கூறத் தரியாது ஆசிரியர் உற்ற செயல் அது முற்றி என்றருளினர்;
இஃதவர் மரபு. முற்றி - அணைய - என்று கூட்டுக.
 
     அறவாணர்கள் - சோதிடர்கள்; அறநூல் விதிப்படி காலக் கணித நிலைகளால்
கோள்களின் பலன்பற்றி அறிந்துகூறி மக்களை அறவழி நிறுத்தும் துணைவர்களாதலின்
அறவாணர் எனப்பட்டனர். “ஓதுங்க ணான்மறை யுத்தமரே” (திருக்கோவை).
     பிணிவிட்டு - பிணி - காலைப்பிணித்து மேல் ஏற நிறுவியநிலை; விட்டு -
கட்டு நீக்கிய யியல்பிற் கீழே விட்ட அதனால்; விட்டு - விடப்பட்டதனால்; விடுவிக்க
என்னும் பிறவினை யெச்சம் விட்டு எனத் தன்வினை யெச்சமாய் திரிந்து நின்றது.
 
     இறவா தொழிவாள் - அன்று பிள்ளைபிறந்த சின்னேரத்துள் இறப்பவளாயினும்
கோச்செங்கண்ணாரின் தாய் என்ற புகழால் என்றும் இறவாதிருப்பவள்; கால்மேலே
தூக்கி நிறுவிய நிலையிலும் குறித்தகால எல்லையளவும் சாவாமல் இருந்தவள்
என்றுரைத்தனர் முன்னுரைகாரர்கள். ஒழிவாள் - இறவாது பெற்றெடுக்க - என்று
கூட்டி யுரைப்பாரு முண்டு. ஒழிவாள் - உடன் விரைவில் இறப்பவள். மணி முத்து
முதலியவை வெளிப்பட்டவுடன் அவற்றின் ஆதாரப் பொருள்கள் அழிவுறுந்
தன்மையும் காண்க.
 
     அருமணி - மணிபோன்ற மகன்; “வலம்புரி முத்தின்” என்பது திருவானைக்காப்
புராணம். மணி - மகவுக்கு உவமையாகுபெயர்.
 
     என் கோச்செங்கண்ணானோ? - பிள்ளை பிறக்கும் நேரம் கழித்து ஒருநாழிகை
யளவும் பிறவாமல் ஒடுக்கிவைத்தமையின் குழவியின் கண் சிவந்திருந்தமை
நோக்கித்தாயார் இவ்வாறு பெயரிட்டழைத்தனள் என்க. அன்னையார் அன்பு
மேலிட்டழைத்த அதுவே பெயராய் வழங்கலாயிற்று; சோதிடர் சொல்லக்கேட்டுச்
சோழன் என்செய்வோம் என மயங்கியபோது, தேவி தமதுகாலை ஆர்த்துத் தலை