பக்கம் எண் :

பெரியபுராணம்563

 

நீங்க; இவர்களது சிவனடிப்பற்றின் உறைப்புச், சோகத்தைக் கீழாக்கி, மேலோங்கியது;
சோகம் தெரியாமை மட்டுமன்றி, முகமலர்ச்சியும் போந்தது என்பதை மேல் வரும்
பாட்டாலறிக; நம்பிகளது வரவு தெரிந்து என்பது குறிப்பெச்சம்.            7
 

4236.     துன்ப மகல முகமலர்ந்து தொழுவார் தம்மை முகநோக்கி
“இன்ப மைந்தன் றனையிழந்தீர் நீரோ” வென்ன வெதிர்வணங்கி
“முன்பு புகுந்து போனதது; முன்னே வணங்க முயல்கின்றோம்;
அன்பு பழுதா காமலெழுந் தருளப் பெற்றோ” மெனத்தொழுதார்.   8
 
     (இ-ள்) துன்பமகல......நோக்கி - மகவிழந்த சோகமாகிய துன்பம் நீங்க
முகமலர்ந்து தொழுவாராகிய மறையவனையும் மனைவியையும் எதிர்நோக்கி,
(வன்றொண்டர்); இன்ப....என்ன - இன்பமகனை யிழந்தவர்கள் நீங்களோ? என்று
வினவ; முன்பு புகுந்து...தொழுதார் அந்நிகழ்ச்சி முன் காலத்து நேர்ந்து கழிந்தது;
முன்னமே தேவரீரை வணங்க முயல்கின்றோம்; எங்கள் அன்பு வீண்போகாமல்
தேவரீர் இங்கு எழுந்தருளும் பேறு பெற்றோம் என்று சொல்லித் தொழுதார்கள்.
 
     (வி-ரை) துன்பமகல முகமலர்ந்து - துன்ப நீக்கம் மட்டுமேயன்றி இன்ப
ஆக்கமுங் கொண்டு.
 
     இன்ப மைந்தன் - இல்லறத்துக்கு நன்கலமாய் இன்பந் தரத்தக்க மகன்; மகன்
இறந்து பல காலமாகியும் இங்கு இன்ப மைந்தன் என்றது அவன் மீண்டு உயிர் பெற்று
எழுந்து இன்பந் தரவுள்ள நிலையின் திருஅருளின் முற்குறிப்பு.
 
     எதிர் வணங்கி - முன்னர் “இறைஞ்சினார்” (4236) என்றது அவர்கள் முதலிற்
செய்த வணக்கம். இங்கு வணங்கி என்றது நம்பிகளின் அருள் வினாவுக்கு விடை கூறு
முகத்தால் வணங்கிக் கூறும் மரபு பற்றிய வணக்கம்.
 
     அது முன்பு புகுந்து போனது - என்க. அது வெகுநாட்களின் முன் கழிந்த
செயல். அது பற்றிக் கவலை வேண்டா என்பது.
 
     முன்னே வணங்க முயல்கின்றோம் - தேவரீரைக் கண்டு வணங்கப்
பலகாலமாக முயன்று வருக்கின்றோம்; இதனால் இவர்கள் நம்பிகளிடம் நீண்ட காலமாக
அன்பு பூண்டொழுகிய திறம் புலப்படக் கூறியவாறு.
 
     அன்பு பழுதாகாமல்...பெற்றோம் - நாங்கள் செலுத்திய அன்பின்றிறம்
வீண்போகாமல் தேவரீர் எமது முயற்சியின்றியே இங்கு எழுந்தருளும் பேறு பெற்றோம்;
பல நாட் செய்த அன்பாகிய தவப்பயனாய் இன்று இப்பேறு பெற்றோம் என்றபடி.
அப்பூதியார் அரசுகள் வரலாறு இங்கு நினைவு கூர்தற்பாலது. முன் (1792)ல்
உரைத்தவையும் பிறவும் பார்க்க.
 
     தொழுதார் - இது சிறப்பு வணக்கம்.
 
     தம்மை நோக்கி யந்த - என்பதும் பாடம்.                      8
 
4237. “மைந்தன் றன்னை யிழந்ததுயர் மறந்த நான்வந் தணைந்ததற்கே
சிந்தை மகிழ்ந்தார் மறையோனு மனைவி தானுஞ் சிறுவனையான்
அந்த முதலை வாய்நின்று மழைத்துக் கொடுத்தே யவிநாசி
எந்தை பெருமான் கழல்பணிவே” னென்றார்; சென்றா ரிடர்களைவார்.