| காடுகளையும், நிரம்பிய மணிகளையுடை நீர் பொருந்திய கான்யாறுகளையும், துறுகற்சுரங்களையும் கடந்து சென்றருளி; குன்ற....வளநாட்டகம் புகுந்தார் - வளமுடைய மலைநாட்டினுட் புகுந்தருளினர். 15 |
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
4242. (வி-ரை) பரவும் பெருமை - இறைவரைத் துதிக்கும் பெருமையுடைய என்றும், உலகவராற் துதிக்கப்படும் பெருமை என்றும் உரைக்க நின்றது. |
பாடி - பாடி முடித்துத் திருக்கடைக் காப்புச் சாத்தி; இத்திருப்பதிகம் பொய்கைக் கரையிற் றொடங்கப்பட்டு “உரைப்பாருரை” என்று நான்காவது பாட்டளவும் அங்கு அருளப்பட்டது; அதன்பின் மகனை முதலை வாயினின்று பெற்றபின் அவனையும் உடன்கொண்டு திருக்கோயிலுக்குப் போந்து திருமுன்பு ஏனைய ஆறுபாட்டுகளும் அருளி நிறைவாக்கப்பட்டது என்பதாம். “அழைத்துக் கொடுத்தே அவிநாசி யெந்தை பாதம் பணிவேன்” (4237) என்றதும், “உரைப்பா ருரையென்றெடுத்ததிருப் பாட்டு முடியாமுன்.....தருவித்தான்” (4239) என்றதும், உடன், “முதலை கரையின்கட் கொடுவந் துமிழந்த” (4240) என்றதும், அதனைத் தொடர்ந்து அரனார் தம்மை - புதல்வனையும் கொண்டுபணிந்தார்” (4291) என்றதும் காண்க. |
போந்து - கோயிலின் புறம்பு போந்து. |
அன்பு விரவு மறையோன் - அன்பு - நம்பிகள் திருவடிக் கடிமைபூண்ட அன்பு. அன்பு விரவு - விரவியதனால் என்று காரணக் குறிப்புடன் நின்றது. |
வெண்ணூல் பூட்டிக் - கலியாணம்முடித்து - உபநயனச் சடங்காகிய மங்கலம் தாமே முன்னின்று செய்வித்து; பூணூற்கலியாணம் என்பது மரபு; பிரமோப தேசத்தால் ஞானஞ்சேர்தல் குறிப்பு. |
முரசம் இயம்ப - சிறிது நேரம் முன்பு அழுகையொலியாயிருந் அந்தமனையில் முரசம் இயம்ப மங்கலவொலி முழங்கச்செய்து. |
வெண்ணூல் பூட்டி - எதிர்மனையில் இம்மகனுடனிருந்து பிழைத்த மகனது உபநயனங் காரணமாக இவ்வரலாறு நிகழ்ந்ததாதலின் அக்கருத்தை முற்றுவித்து என்பது; திருமருகலில் ஆளுடைய பிள்ளையார் வணிகனை விடந்தீர்த்துத் தாமே அவர்களுக்கு மணம்புணரும் பெருவாழ்வும் வகுத்துவிட்ட வரலாறு இங்கு நினைவு கூர்தற்பாலது. |
சேரலர்பால்.....அணைகின்றார் - தாம் கருதிவந்த செயல் (4231). 14 |
4233. (வி-ரை) சென்ற சென்ற குடபுலம் - மேற்றிசைத் தேயத்தில் நம்பிகள் போயின அங்கங்கும்; இவை மலைநாடு சாரும்வரை இடைப்பட்ட கொங்கு நாட்டுப் பகுதிகள். |
சிவனார்....இன்புற்று....கடந்தருளி - சிவனடியார்கள் இருக்கும் பதிதோறும் நம்பிகளை வரவேற்று உபசரித்துக் குறைவறுத்தமையால் மகிழ்ந்து. “கொங்கர் நாடு கடந்தருளி” (3797); “சென்ற திசையிற் சிவனடியார் சிறப்பினோடு மெதிர்கொள்ளக், குன்றுங் கானு முடைக்குறும்ப ரிடங்க டோறுங் குறைவறுப்பத், துன்று முரம்புங் கான்யாறுந் துறுகற் சுரமும் பலகடந்த” (3798) என்று சேரனாரது யாத்திரைக் குரைத்தவை இங்கு நினைகூர்தற்பாலன. |
நலஞ்சேர் தலம் - இடைப்பட்ட நிலவெளியிற் காணும் நல்ல தனி நகரங்கள்; நலஞ்சேர் என்றது அந்நாட்டுப் பகுதிகளுள் அந்நாளில் அங்கங்கும் சில தனி நகரங்களன்றி ஏனையவை நலம் பொருந்தாதன என்ற நிலைக்குறிப்பு. |