| நாசியாகிய சிவபெருமானை அரிய மறையோனது கண்மணிபோன்ற மகனையுங் கொண்டுசென்று உலகில் பணிந்தனர். |
(வி-ரை) உத்தரியம்....ஆர்த்தார் - உத்தரியத்தை ஆகாயத்தில் வீசி ஆர வாரித்தல் மகழ்ச்சி காட்டும் செயல்களுள் ஒன்று; இது வேதியர்கள் முதலிய உயர்ந்ததோர்பால் மிக்கு வழங்குவதொரு மரபு; மறையோ ரெல்லாம் என்றது காண்க. “தாமறுவை யுத்தரியந் தனிவிசும்பி லெறிந்தார்க்கும் தன்மை” (1993). களிப்பினால் சிறு துணிகளை மேல் விரி ஆரவாரிக்கும் வழக்கு இந்நாளிலும் நிகழ்வது. |
வேதநாதம் மிக்கு எழுந்தது - ஒலிப்பவரின்றியே வேத முழக்கம் கேட்பது ஒரு நன்னிமித்தம் என்பது (1929); வேதியர் வேதம் ஓதினர் என்றலுமாம். |
அண்ணலார் - நம்பிகள்; புதல்வனையுங் கொண்டு பணிந்தார் - சிவன் அருளால் உயிர் பெற்று வந்தமை குறித்துப் புதல்வனைக்கொண்டு பணியச் செய்தார்; தமக்கு அருளியமை குறித்து உடன் திருமுன் சென்று பணிந்தார். முன் 4239ல் உரைத்த நிலையும் கருதுக. |
கண்ணின் மணியாம் - அருளால் மீள உயிர் பெற்றுவந்த அருமைப்பாடு குறித்தது. மணிஆம் - ஆம் - ஆக்கச் சொல் உவமம் குறித்தது. |
பணிந்தார் - மறையோர் முதலியோர் தமது கழல்பணிய, அந்நிகழ்ச்சி இறைவரது செயலாதல் பற்றி அவரைப்பணிந்தார் என்பதாம். “எவ்வுயிர்க்குங், காவலனார் பெருங்கருணை கைதந்த படிபோற்றிப், பாவலர்செந் தமிழ்பாடிப் பன்முறையும் பணிந்தெழுவார்” (3016) என்ற ஆளுடைய பிள்ளையார் சரிதம் இங்கு நினைவு கூர்தற்பாலது. 13 |
| 4242. | பரவும் பெருமைத் திருப்பதிகம் பாடிப் பணிந்து போந்தன்பு விரவு மறையோன் காதலனை வெண்ணூல் பூட்டி யண்ணலார் முரச மியம்பக் கலியாண முடித்து, முடிச்சே ரலர்தம்பாற் குரவ மலர்ப்பூந் தண்சோலை குலவு மலைநா டணைகின்றார் . 14 |
| 4243. | சென்ற சென்ற குடபுலத்துச் சிவனா ரடியார் பதிகடொறு நன்று மகிழ்வுற் றின்புற்று நலஞ்சேர் தலமுங் கானகமுந் துன்று மணிநீர்க் கான்யாறுந் துறுகற் சுரமுங் கடந்தருளிக் குன்ற வளநாட் டகம்புகுந்தார் குலவு மடியே னகம்புகுந்தார். 15 |
4242. (இ-ள்) பரவும்....போந்து - துதிக்கின்ற பெருமையுடைய திருப்பதிகத்தினைப்பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தி வணங்கிப் புறம்போந்து; அன்பு....முடித்து - பெருமையுடைய நம்பிகள் (தம்பால்) அன்பு பொருந்திய வேதியனது மகனைப் பூணூல் அணிவித்து முரசங்கள் சத்திக்க உபநயன மங்கலம் முடித்து; முடிச்சேரலர் தம்பால்....அணைகின்றார் - முடிமன்னராகிய சேரனாரிடத்துச் சேர்வதற்கு, நறுமணமுடைய மலர்கள் நிறைந்த அழகிய குளிர்ந்த சோலைகள் நிறைந்த மலை நாட்டில் அணைகின்றாராய், 14 |
4243. (இ-ள்) குலவும்.....அகம்புகுந்தார் - அடியேனுடைய விளங்கிய உள்ளத்திற் குடிபுகுந்தவராகிய நம்பிகள்; சென்ற....இன்புற்று - மேற்றிசையில் உள்ள நாட்டில் போயின அங்கங்கும் சிவனாரடியார் பதிகள்தோறும் மிகவும் மகிழ்ந்து இன்பம் அடைந்து; நலம்........கடந்தருளி - நன்மை பொருந்திய தலங்களையும், |