| உமிழ்ந்த பிள்ளைதனை - மறலிமைந்தன் உயிர் உடலின் வளர்ச்சியுடன் முதலை வாயிற் றருவித்தான் என்ற மட்டில் முன்பாட்டில் கூறிய ஆசிரியர், அது அவனை உமிழ்ந்த செயலை வேறு கூறாது உமிழ்ந்தபிள்ளை என்றதனாற் பெறவைத்தார். |
உமிழ்ந்தது - அவ்வாறு உமிழ்ந்த என்று பிரித்துரைத்துக்கொள்க. பெற்றோரது சோகத்தை விரைவில் போக்கவந்த வரலாற்றின் விரைவுக்கேற்பச் சொற்சுருக்கம் படக் கூறியது கவிநயம். மறலிமைந்தனைத் தருவித்த செயல் கூறும் சுருக்கமும் இக்கருத்துப்பற்றியது. இனி, மேல்வரும் உவகை நிகழ்ச்சி கூறும் விரிவை இவற்றுடன் ஒப்பு நோக்குக. |
உருகாநின்ற தாய் ஒடி எடுத்துக்கொடுவந்து - வீழ்ந்தாள் - தந்தையினும் தாயின் அன்பு மிகுந்த நிலை குறித்தது. வீழ்ந்தாள் - தன் செயலற்ற நிலையில் வீழ்ந்த குறிப்பு; எடுத்துக்கொடுவந்து - மைந்தன் இவ்வரலாறு அறியானாதலால் அவனையும் உடன் பணியச் செய்யும் நிலைபற்றி அவனைத் தாய் தானே எடுத்துக்கொண்டுவந்து சேவடியில் விழுத்தி வீழ்ந்தாள். சீலமறையோனொடு - வீழ்ந்தாள் - மறையோன் விழுந்ததும் மனைவி விழுந்ததும் உடன் ஒருங்கே நிகழ்ந்தன என்பது; சீலம் - சைவசீலம்; இது முன் (4235 - 4237) உரைக்கப்பட்டது; இதுவே நம்பிகளது திருவருள் பெறக் காரணமாய் நின்றமையால் அதனை எடுத்துக் கூறினார்; அருள் பெறக் காரணமாகிய சீலம் என்க. |
வீழ்ந்தாள் - என்றமையால் மறையோன் - மகன் - மனைவி மூவரும் வீழ்ந்தாராயினும் இதனுள் அவ்வம்மை செயலே மிக்கிருந்தது என்பார் அவள் செயலாக வீழ்ந்தாள் என முடித்தருளினர்.“தானுந்தன் தையலுந்தாழ் சடையோ னாண்டிலனேல்” (திருவா). |
தரு - தேவமரங்கள்; மந்தாரம் முதலியன. |
உயிரளித்த திருவாளன் - நம்பிகள்; திருவாளன் - சைவத் திருப் பெற்றவர்; “திருவாளன் றிருநீறு” (1332) என்றபடி சிவபெருமான் ஒருவரே திருவாளரெனப்படுவார்; “திருவுடையார்” (நம்பி - பூவணம் - இந்தளம் 1); அவரேயனையவராதலின் நம்பிகளும் திருவாளன் எனப்பட்டார். அன்றியும், உயிரளித்தல் - இறைவர் செய்யும் ஐந்தொழிலினுட்பட்ட தொன்றாய், இங்கு அவரருளால் தாம் செய்யும் தன்மைகளையும் இவர்பாலாக்கி யிட்ட நிலையும் கருதுக. 12 |
| 4241. | மண்ணி னுள்ளா ரதிசயித்தார்; மறையோ ரெல்லா முத்தரியம் விண்ணி லேற விட்டார்த்தார்; வேத நாத மிக்கெழுந்த; தண்ண லாரு மவிநாசி யரனார் தம்மை யருமறையோன் கண்ணின் மணியாம் புதல்வனையுங் கொண்டு பணிந்தார் காசினிமேல். |
(இ-ள்) மண்ணில் உள்ளார் அதிசயித்தார் - நிலவுலகிலுள்ள மக்கள் அதுகண்டு அதிசயித்தனர்; மறையோர்....ஆர்த்தார் - மறையவர்கள் எல்லாரும் உத்தரியங்களை ஆகாயத்தில் மேலே வீசி ஆர்த்தனர்; வேத...எழுந்தது - வேத ஒலி மிக எழுந்தது; அண்ணலாரும்.....காசினிமேல் - பெருந்தகையாரான நம்பிகளும் அவி ___________________ |
அவன் உயிர் பிழைத்தனன். அவன் சொல்லிய வரலாறு இது. அவன் உடலில் முதலையின் பற்களால் முதலை விழுங்கியபோதும் பற்றும்போதும் உளவாகிய கீறல் புண்கள் மட்டும் கண்டன. அவை நாளடைவில் ஆறிவிட்டன என்பது. இச் செய்தி பத்திரிகைகளிலும் வெளி வந்தது. |