| நீள் தடம் புயத்து மறலி - இரண்டாண்டுகளின் முன் கழிந்த உயிரை அஃதந் நாளினுள்ள நிலையினின்றும் கொணரவும், அவ்வாறே முதலையினையும் கொணரவும், ஈராண்டு உடல் வளர்ச்சியும் தரவும் மேற் கொண்ட நீண்ட வலிமை குறித்தன இவ்வடை மொழிகள். ஐயாண்டில் மகன்பிரிந்தானாதலின், இப்போது உபநயனப் பிராயவிதி ஏழாண்டாதல் வேண்டப்படுதலின், சென்ற ஆண்டுகளும் வளர்ந்ததென - என்பதற்கு ஈராண்டுகள் எனப்பொருள் கொள்ளத்தக்கது. வரை - நீலமலை. |
திரைப்பாய்புனல் - ஆழ்ந்தகன்ற நீர் நிலை. |
உடலில் - மகவினுடைய உடம்பில். பெருவாய் முதலை - தன்மை நவிற்சி. |
தரைப்பால் வளர்ந்ததென நிரம்ப - முதலையினாற் கவரப்பட்டிறவாது நில உலகில் வளர்ந்திருந்தாற்போல வயது நிரம்ப; என - உவமவுருபு; ஆண்டுகளும் நிரம்ப - என்க. மகவு வந்ததனோடு வயதும் நிரம்ப என உம்மை இறந்தது தழுவிய எச்சம். தருவித்தான் - வரச்செய்தான்; “பிள்ளைதரச் சொல்லு காலனையே” என்ற பதிகத்துக் கேற்ப மறலியின் செயல் விரிக்கப்பட்டது. |
திருப்பதிக முடியா முன் - என்பதும் பாடம். 11 |
| 4240. | பெருவாய் முதலை கரையின்கட் கொடுவந் துமிழ்ந்த பிள்ளைதனை யுருகா நின்ற தாயோடி யெடுத்துக் கொடுவந் துயிரளித்த திருவா ளன்றன் சேவடிக்கீழ்ச் சீல மறையோ னொடுவீழ்ந்தாள் மருவார் தருவின் மலர்மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள். |
| 12 |
(இ-ள்) பெருவாய்....பிள்ளைதனை - பெரிய வாயினின்றும் முதலை கரையினிடத்துக் கொண்டுவந்து உமிழ்ந்த அந்தப் பிள்ளையினை; உருகா நின்ற.....வீழ்ந்தாள் - அன்பு மேலீட்டினால் மனமுருகிய தாய் ஓடிச்சென்று எடுத்துக் கொண்டு வந்து உயிரினை மீளக் கொடுத்த திருவாளராகிய நம்பிகளது சேவடியின் கீழே சைவ ஒழுக்க மிக்க மறையவனோடும் விழுந்து வணங்கினாள்; மருவார்.....வானோர்கள் - ஆகாயத்திலே தேவர்கள் மணமுடைய தெய்வ மரங்களின் பூ மழை பொழிந்தார்கள். |
(வி-ரை) கரையின்கண் வந்து முதலை பெருவாய் கொடு உமிழ்ந்த - என்க. |
பெருவாய் கொடு உழிழ்ந்த - முதலையின் பிளந்த பெரிய வாயின் தன்மையினையும், அது அதனைத் திறந்து உமிழ்ந்த தன்மையினையும் குறித்தது; வாய்திறந்து முதலைக் கக்க மகனை நீ அழைத்ததோ? என்றார் பிற்காலத்தான்றோர்; உமிழ்ந்த - முதலை தனது இரையினை மென்று தின்னாது பிண்டமாக விழுங்கும் நிலையினையும், அவ்வாறு விழுங்கிய உணவு தனது பகுதிக் கொவ்வாத போது மீள உமிழும் நிலையினையும் குறித்தது. “விழுங்க” (4234); முதலைவாயில் உள்ள கூரிய வரிசையின் பற்கள் அதன் இரையினைவிடாது பற்றிக் கொள்வதற்கே பயன்படுவன வன்றிமென்று தின்பதற்கல்ல என்பது அதன் உடல் நூல் அறிஞர் கூற்று.1 _______________ |
1 குறிப்பு :- இங்கு அனுபவத்திற் றெரிந்த செய்தி ஒன்று குறிப்பிடத்தக்கது; சில ஆண்டுகளில் முன் ஒரு சிறுவன் ஆற்று மடுவில் முதலையினால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றுக்குட் போயினன்; ஆனால் உயிர் நீங்கவில்லை. அங்கு அவ்வயிறு பெரிய தொரு வளைவாகிய குகைபோலப் புலப்பட, அவன், அதன் உட்புறத்தைத் தன் கை நகங்களாலும் தன்னிடமிருந்ததொரு சிறிய கத்தியாலும் பிறாண்ட, அதற்கு வயிற்றில் வேதனை யுண்டாயினமையின், முதலை அவனை மீளக் கொணர்ந்து (கக்கி) உமிழ்ந்து விட்டது. உணர்வற்ற நிலையில் கிடந்த அவனைச் சிலர் கண்டு எடுத்து உபசரிக்க |