| | தொன்றுமே வேண்டுவது”;- (4) இத் திருப்பாட்டின் விண்ணப்பம் முடியாமுன் முதலை வாயில் மகனைக் காலன் தருவித்தான்; அது அம்மகனைக் கரையில் கொண்டுவந்து உமிழ்ந்தது என்ற உண்மை ஆசிரியர் அறிவிக்க அறிகின்றோம்; அவிநாசியே! (பெருமானே) காலனை முதலையைப் பிள்ளையைத் தரச் சொல்லு!’ என்பது நம்பிகள் இறைவர்பால் வேண்டிய விண்ணப்பம். “தந்திட வேண்டும் என்றனர்” சங். நிரா. சிவசமவாதி மறுப்பு, பஞ்சகிருத்தியமின்று என்றது (35,36) என்று உமாபதி சிவாசாரியார் இதன் கருத்தருளியது காண்க. உரைப்பார் - ஞான அருளுபதேசம் செய்யும் தேசிகர்; உரைப்பாரது என ஆறனுருபு விரிக்க; உகந்து - மனமகிழ்ச்சியோடு; உள்குதல் - உபதேசச் சொற்பொருளைத் தியானித்தல்; உரை - சீபஞ்சாக்கரம்; சிவநாமம்; உள்குதல் - அதன் பொருளைத் தியானித்தல்; இதன் தன்மை சிவஞானபோதம், சித்தியார், 9ம் சூத்திரத்தினுள்ளும், மற்றும் ஞான நூல்களுள்ளும் சிவாகமங்களுள்ளும் கண்டு கொள்க. இவை அனுபவமுள்ள தேசிகர் வாய்க்கேட் டுணரத் தக்கன; வல்லார் - வல்லமை இதன் அருமை குறித்தது. உச்சியாய் - இறைவரைத் தலையினுச்சியினும், அதன்மேற் பன்னிரண்டங்குலத்தினும் உள்ள யோகத்தானத்தும் வைத்துத் தியானிக்கும் சிவயோக சாதனை குறித்தது; “என்றலையி னுச்சி யென்றுந் தாபித் திருந்தானை” (தேவ - தாண் - திருவாலவாய் - 10); “ பாதபங்கயமும் சூட்டும்” (சித்தி); ஆதியும் அந்தமும் ஆயினாய் - “அந்தமாதி” (போதம் - 1- சூத்); “ஒடுங்கி - உளதாம்” (மேற்படி); புரை - உயர்ச்சி; “முனிவன் புரைவரைக் கீறி” (பரிபா - 11 - 11); பெருமை என்றலுமாம். “புரை யோய் புரையின்று” (மேற்படி 20-77); புரைக்காடு -உயர்ந்த - பெரிய - காடுபோன்ற; காடு சோலை - காடு போன்ற சோலை; உவம உருபு விரிக்க; கரைக்கான் முதலை - கரையில் வந்து உமிழும் முதலை; காலனை முதலை வாயில் பிள்ளையைத் தருவிக்கும்படி கட்டளை யிடுவீராக என்க; “மறலி....வாயிற் றருவித்தான்” (4239) என்று ஆசிரியர் பொருள் விரித்தமை காண்க. முதலையை - முதலை வாயினின்றும் ஐகாரம் ஐந்தனுருபாகி நீக்கப் பொருளில் வந்தது; பிள்ளையை - என இரண்டனுருபு விரிக்க; உரைப்பார்....உச்சியாய் - சிவராஜயோக நிலையில் வழிபடும் எனது தலைவரே என்றும், ஆரிதயுமந்தமு மாயினாய் - இங்கு முதலை விழுங்குதலால் (அந்தமாகி) உன்னுள் ஒடுங்கிய மகனுயிரை மீள (ஆதியாகி) இவ்வுலகில் உளதாகச் செய்ய வல்லவரே என்றும், கரைக்கான் - காலனையே - காலன் உமதேவல்வழி நிற்பானுதலின் அவனை இவ்வா றேவிப் பணி கொள்க என்றும், பிறிதோர் உட்குறிப்புப் பொருள் பெறுமாறுய்த்துணர்ந்து கொள்க;- (5) அரங்கு - ஆடுமிடம்; அரங்காவது - இடுகாடு - இடுகாட்டிலாடல் சங்காரங் குறித்தது. சங்காரம் புனருற்பத்திக்கு - மீளச் சிருட்டிக்கு - ஏதுவாதல் குறித்து, இங்கு மகனை மீளத்தந்த நிகழ்ச்சியை உட்குறித்து நின்றது “வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே” (தேவா) சரம்கோலை - சரம் அம்பு சரமாகிய கோலினை; கோல் - அம்பினது பகுதி; வரிசிலை வாங்கி நாணியிற் சரங்கோலை சந்தித்து - என்க; வாங்குதல் - வளைத்தல்; நாணியில் - நாணில் என்பது நாயில் என நின்றது. நாண் - வில் பூட்டும் கயிறு; சந்தித்து - அளவுபடப் பூட்டி; கோத்து; எய்தாய் - எய்தல் உபசாரமாத்திரையாய் நின்றது; சோலைக் கோயில் - சோலை சூழ்ந்த கோயில் இந்நிலை இன்றும் காணலாம்; கொண்ட - இடங்கொண்ட; குழகனே என்பதும் பாடம்; புரங்கெட எய்தாய் - முப்புரம் எய்தலும் மூவரைக் காத்தலும் உடன் நிகழ்ந்தவாறு இங்கு மகனைச் சங்கரித்தலும் மீள உயிர்தருதலும் நிகழ்ந்தன என்ற குறிப்பு முடையது;- (6) | | |
|
|