| | நாத்தானும் - நாவின் செய்கையாலும்; சோத்தென்று - வணக்கம் என்று; போற்றி என்று; நா - இங்கு அதன் செய்கைக்கு வந்தது; பூத்தாழ் - பூக்கள் மிகுந்த; ஆட்பட்ட குற்றம் - ஆட்பட்டிருந்தும் அல்லேன் என்ற குற்றம்; தமது சரிதவரலாறு. குற்றமே - குற்றமாமோ? ஆகாது என்று எதிர்மறை குறித்தது; நீ அதனைக் குற்றமாகக் கொள்ளாது குணமாகவே கொண்டனை ஆதலின் உன் அடியானாகிய என்பாலன்பு பூண்ட மறையவன் சிறுவனை உயிர்ப்பித்து என் அடிமைத் தன்மையை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்பது குறிப்பு;- (7) மந்தி....வழிபட - மந்தி - பெண் குரங்கு; கடுவன் - ஆண் குரங்கு; மந்தி கடுவனுக்குண் பழநாடி மலைப்புறம் - தன் நாயகனாகிய ஆண் குரங்குக்கு உண்ணுதற்குப் பழங்களை மலைப்புறத்தில் நாடிப் பெண் குரங்கு செல்வதாகக் கூறுதல் இயற்கைவர்ணனை; இதனுள் கணவனையும், மக்கள் - சுற்றத்தாரையும், உணவு தந்து காக்க, இல்வாழ்க்கையில் மனைவிக்குள்ள கடமை, குறிப்பிற் பெறவைத்துக் கூறியது தமிழ் நாவலர் பெருமானது கவிநயம்; இனி அவ்வாறு குடும்பக் கடமையை எண்ணிச் சென்று அதன் பொருட்டு இறைவரை நினைந்து சந்திகடோறும் சலமும் பூவும் இட்டு வழிபடுகின்றது என்றது மேலும் பெரியதோர் கவிநலம்; இவ்வாறு அறிவு குறைந்த பிராணிகளும் வழிபடுதல் நம்பிகளது திருக்கேதாரப் பதிகம் முதலியவற்றுட் காண்க. இனி, அவ்வாறு தன் நாயகனுக்கு உண் பழநாடிச் சென்ற மந்தி சந்திகள் தோறும் மக்கள் இறைவரைச் சலபுட்ப மிட்டு வழிபடுதல் பார்த்துத் தான் வந்த செயலை மறந்து இறை வழிபாட்டிற் புகுந்தது என்றுரைத்தலுமாம்; இவ்வாறு கூறிப், பின்னும் பெரியதோர் கவிநயமும், மக்கள் செய்கைகளைப் பார்த்து அவ்வாறே தாமும் செய்யும் குரங்குகளின் இயல்பினைக் கூறியதுமாம். (Imitative instinct of monkeys); இனி, இவ்வாறு குரங்குகள் தமது குடும்பச் செயலை மறந்து வழிபாட்டிற் புகும் பதி என்று தலவிசேடங் கூறுமாற்றால், இங்கு மறையோனும் மனைவியும் மகவிழந்த சித்தசோகந் தெரியாமே வந்து சிவன்பால் அன்பு நிறைதலின் தமது திருத்தாளிறைஞ்சிய செயலைக் குறிப்பித்த வாறுமாம்; “புந்தியுறைவாய்” என்ற குறிப்புமிது. நந்தி - இறைவரது திருநாமம்; நரகம் புகாமை வேண்டிக் கொள்வேன்; முன்னர்ப் பிறவாமை வேண்டினார்; அவ்வாறு பிறவாமை பெறாது பிறக்க நேரிடினும் உன்னை மறந்து துயருழக்கும் நரகம் புகாமை வேண்டுவன் என்றதாம். “பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டே லுன்னை யென்று, மறவாமை வேண்டும்” (1776) என்று, அம்மை வேண்டிய வரம் இங்கு நினைவு கூர்தற்பாலது; சிவனை மறந்தநிலை நரகம் புகுதலேயாம் என்பது; இனி, இங்கு மகனை மீள அழைத்துக் கொடுக்கும் திருவுள்ளக் குறிப்புடனே பதிகம் எடுத்துப்பாடியும், முதல் மூன்று பாட்டளவும் இறைவர் அருள் செய்யாதிருந்தனர் என்று கருதி நான்காவது பாட்டில் “அவிநாசியே! முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே!” என்று வற்புறுத்துதல் போல அரிதிற் கேட்க, அது முடியும் முன் மகன் வந்தது கண்டு, திருவுள்ள மறியாதே இறைவரை ஏவியது போன்று அபசாரப் பட்டமை கருதி இவ்வாறு வேண்டித் துதித்த குறிப்புமாம்; ஆளுடைய அரசுகள் திருமறைக்காட்டிற் கதவம் திறப்பித்த வரலாறு இங்கு நினைவு கூர்தற்பாலது; முன் மூன்றாவது பாட்டிற் பிறவாமை வேண்டிக் கொண்ட குறிப்பு வேறு; அது முன் உரைக்கப்பட்டது; “பேணா தொழிந்தே னுன்னையல் லாற்பிற தேவரை” என்று மேல் வரும் பாட்டிற் கூறும் தொடர்ச்சியும் கருதுக;- (8) உன்னையல்லாற் பிறதேவரைப் பேணா தொழிந்ததேன் - எதிர் மறையாற் கூறினார் உறுதி குறித்தற்கு; பேணாது என்றது மனத்தின் செயலும், காணாது - என்றது புறவிந்திரியங்களின் | | |
|
|