| | செயலும் குறித்தன; இன்னம் காட்டுதியேல் நான் காண்பன் - என்க. “காடு வித்தா லாரொருவர் காணா தாரோ காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே” (தேவா) என்ற கருத்துக்கள் காண்க; மேல் “காணாத கண்கள் காட்ட வல்ல” என்ற கருத்துமிது; “காண வுள்ளத்தைக் கண்டு காட்டலின்” என்பது ஞான சாத்திரம்; காணாத - காண மாட்டாத; காட்ட - காட்டுவிக்க; இங்குக் கூறிய காட்சிகள் இறைவர், நம்பிகளுக்கும் அவர்மூலம் உலகுக்கும் செய்யும் பேரருட்டிறங்களின் தன்மைகள்; காணா தொழிந்தேன் - தேவரீர் அருள்புரிவீர் என்பதனை உட்கொள்ளாது நான்காவதுபாட்டில் எடுத்துக்கூறி விண்ணப்பித்த நிலையினைக் குறிப்பில் உணர்த்துதலும் காண்க. ஆட்பாலவர்க் கருளும் வண்ணங்கள் அளவில என்ற திருப்பாசுரத் கருத்துக்களும் இங்குச் சிந்திக்கற்பாலன ;- (9) நள்ளாறு -இப்பதியில் ஓடும் ஆற்றின் பெயர்; தலபுராணம் பார்க்க; தெள்ளாறு - அவ்வாற்றின் சிறப்பு; அரத்துறை; சிவத்தன்மை கொண்ட அதன் துறை; திருவரத்துறை என்னும்பதி என்றலுமாம்; திருவரத்துறைத் திருப்பதிகத்தினுள் நிவா நதியின் சிறப்புக் கூறிய பகுதிகள் இவ்வாற்றிற்கும் பொருந்தக்காணும் நினைவுபற்றி இப்பதியினைக் கூறினார் போலும்; புள் - சோலைகளில் வாழும் கிளி குயில் முதலிய புட்கள்; ஏறுதல் - நிறைதல்; இங்கு இக்குளத்திடையிலும், சூழ்ந்தசோலைகளிலும் புட்கள் நிறைதல் இன்றும் கண்டுகளிக்கத்தக்க காட்சியாம்; குளத்திடை...கிறிசெய்ததே - முன் (2) வது பாட்டிற் கூறியது மகன் மீண்டு வருதலைத் திருவுள்ளத்திற் கண்டு முன்னிலைப்படுத்தியது. இங்கு மகன் வந்து விட்டானாதலின் அவனையே முன்னிலையிற் கண்டு கூறியது. ஆதலின் கூறியது கூறலன்மையுணர்க; சரித ஆதரவாகிய அகச்சான்று; 2ம் பாட்டிலுரைத்தவை பார்க்க;- (10) நீர் - கங்கை; ஏள ஏறு - சடை - அதன் மிகுதிக்கு மேல் ஓங்கித் தடுத்து நிற்கும் நிலை குறித்தது; நிமிர் புன்சடை - புன் சடையாயினும் நீர் ஏறத் தானும் நிமிர்வதாம் என்றபடி; ஏறி - பெயர்; கார் - நிறம்; கரிய நிறமுடைய விடத்துக்கு வந்தது ஆகுபெயர்; ஏறு - தனது விடத்தன்மை நீங்கி அமுதத் தன்மை பெற்றதாதலின் ஏற்றம் - மேன்மை - கொண்ட; சீர் - சிறப்பு; “காலனையன் றேவிக் கராங்கொண்ட - பாலன், மரணந் தவிர்த்ததுவு மற்றவர்க்கு நந்தங், கரணம்போ லல்லாமை காண்” (களிறு -12) என்று ஞானநூல் இதனைப் போற்றியது காண்க; “பரவும் பெருமை” (4242). | குறிப்பு ;- இப்பதிகத்துள் முதல் நான்கு திருப்பாட்டுக்கள் குளக்கரையில் நின்று மகன்உயிர் பெற்று வருமுன்னும், ஏனைய ஆறு பாட்டுக்கள் அதன்பின் அவனையும் கொண்டு சென்று திருக்கோயிலில் இறைவர் திருமுன்பும் அருளப் பட்டன என்பது கருதப்படும்; “எடுத்தார் திருப்பதிகம்” (4238) என்றும், “பரவும் பெருமைத் திருப்பதிகம் பாடிப்பணிந்து” (4242) என்றும் ஆசிரியர் அருளிய கருத்துக்கள் காண்க. | தலவிசேடம்; திருப் புக்கொளியூர் - (அவிநாசி) ;- இது கொங்கு நாட்டுப் பாடல் பெற்ற பதிகள் ஏழனுள் ஒன்று. முதலை விழுங்கி மூன்றாண்டு சென்ற மகனை ஆளுடைய நம்பிகள் “ஏற்றான்” என்று பதிகம்பாடி முதலை வாயினின்றும் வரவழைத்து உபநயனமும் செய்வித்து அவனுடைய பெற்றோரை மகிழ்வித்த பேரற்புதச் செயல் நிகழ்ந்த பதி. அற்புதம் நிகழ்ந்த அக்குளக்கரையில் அவ்வரலாறு குறிக்கும் திருவுருவங்களுடன் நம்பிகளது தனிக்கோயில் உள்ளது; பங்குனி உத்திரத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது;கோயிற் கொடிக் கம்பத்திலும், முன்புறம் திரு | | |
|
|