| | விளக்குப் பெருங்கம்பத்திலும் இவ்வுருவங்கள் உள்ளன. வரலாறு புராணத்துட் பார்க்க; அம்பிகை தவஞ் செய்து இறைவரை மணந்து வலப்பாகம் பெற்றனர் என்பது தல வரலாறு. அம்பிகையாரது தவக்கோலத் திருவுருவம் தனிக்கோயிலில் வெளிப்புறத்தில் திருக்குளத்து மேற்குக் கரையில் உள்ளது. அம்மையார் அங்கு ஒரு பாதிரி மரத்தின்கீழ் எழுந்தருளி யுள்ளார்; “பாதிரிமரத் தம்மன்” என்ற வழங்குகிறார்கள். பாதிரி தல மரமன்று; சில வரலாறுகளில் அவ்வாறு குறித்திருப்பது தவறு; இப்பதியின் தல மரமும் அம்பிகை தவம் செய்ததும் மாமரம் என்பது தலபுராணம்; காலாந்தரத்தில் பாதிரி மரம் உண்டானது போலும். “காசியில் வாசி அவிநாசி” என்பது இந்நாட்டில் வழங்கும் பழமொழி; இத்தலத்துக்கு தட்சிண காசி (தென்காசி), திருநெல்வேலிச் சில்லாவில் இப்பெயருடைய தலத்துடன் மயங்கற்பாலதன்று, என்ற பெயரும், சுவாமி கோயிலில் உள்ள தீர்த்தக் கிணறு காசிக் கிணறு - காசிக் கங்கை - என்று வழங்கப் படுவதும் பிரசித்தம்; தலபுராணம் பார்க்க; 63 நாயன்மார்கள் திருவுருவங்களும், முதலை வாய்ப்பிள்ளை திருவுருவங்களும் ஆகிய அழகிய செப்புப் படிமங்கள் உற்சவ மூர்த்திகளாக உள்ளன; கொங்கு நாட்டில் இவ்வமைப்பு இவ்வொருபதியிலே தான் உண்டு. இவர்கள் சித்திரைப் பெருவிழாவாகிய இந்திர விழாவில் உற்சவங் கொண்டு பெருஞ் சிறப்பாகக் காட்சி யளிப்பர். புக்கொளியூர் - என்பது ஊர்ப் பெயர்; “செல்வத் திருப்புக் கொளியூர் சென்றடைந்தார்” (4232) என்று ஆசிரியர் கூறுதல் காண்க. அவிநாசி என்பது இப்பதியில் விளங்கும் இறைவர் பெயர். பதிகம் பார்க்க. இப்பொழுது பழயஊர்ப் பெயர் மறைந்து அவிநாசி என்பது ஊர்ப் பெயராகத் தவறி வழங்குகின்றது; இறைவர் அக்கினி தாண்டவஞ் செய்தபோது காணலாற்றார்களாகி அஞ்சிய தேவர்கள் புகுந்து ஒளித்துக் கொண்ட இடமாதலால் இப்பெயர் பெற்ற தென்பது தல வரலாறு; இவ்வூர் முன் இருந்த இடம் கோயிலின் தென்புறம் முதலைவாய்ப்பிள்ளை அழைத்த குளத்(ஏரி)தினை அடுத்துத் தென்புறமாக உள்ள கொல்லைவெளி என்பது அரசாங்கப் கணக்குக் களாலும், அந்நிலத்தின் அடையாளங்களாலும், ஊரார் வழங்கும் வழக்காலும் அறியப்படும். பழய ஊர் காலாந்தரத்தில் சிதைவுண்டது; புராணத்திற் கூறும் வரலாறுகள் நிகழ்ந்த இடம் அதுவாம். ஆளுடைய பிள்ளையார் புராணத்தினுள் “அப்பாலைக் குடபுலத்தி லரனார் மகிழுந் தானங்கள், எப்பாலுஞ் சென்றிறைஞ்சித் திருநணாவினை யிறைஞ்சி” (2225) என்றதனால் பிள்ளையார் இத்தலத்துக்கு எழுந்தருளி யிருத்தல் கூடுமென்று கருதப்படுகின்றது. பிள்ளையாரும் அரசுகளும் அருளிய க்ஷேத்திரக் கோவைத் திருப்பதிகங்களால் இந்தப் பதியுள்ள மேல் கொங்கு நாட்டின் பலபகுதிகளையும் அவ்விரு பெருமக்களும் வந்து வணங்கியருளியமை கருதப்படும்.1 “மொக்கணி யருளிய முழுத்தழல் மேனி, சொக்கதாகக் காட்டிய தொன்மையும்” (திருவா - கீர்த்தித்திருவகவல் - 33 - 34 வரிகள்) என்றும், “அரிய பொருளே யவி _____________________ | 1 மொக்கணி - மொக்கணீச்சரம் என்னும் திருவாசக வைப்புத்தலங்களுள் ஒன்று. இது திருப்புக்கொளியூரின் (அவிநாசி) அணிமையில் மேற்கில் 5 நாழிகையளவில் உள்ள சேவூரி (மாட்டூர் என்னும் தேவார வைப்புத்தலம். “மாட்டூர றவா” ஊர்த்தொகை) னின்றும் மேற்கில் 3 நாழிகை யளவில் உள்ளது. பூசையுமின்றிச் மூர்த்திகளும் சிதலமாய்க் கிடக்கின்றன! சரித ஆராய்ச்சியாளர்கள் மட்டில் எப்போதாவது போய்க்கண்டு ஆய்ந்து வருகின்றனர். அனப்ர்கள் கவனித்துக் ஆலயப்பணி செய்வார்களானால் பெருஞ் சிவபுண்ணியமாகும்! | | |
|
|