பூரணகலசம் - நீர் நிறை குடம்; மங்கலப் பொருள்களுள் ஒன்று. |
தோழர்கள் - சேரலனாரும் நம்பிகளும்; நடவிய - நடத்தி ஏவிய; ஊர்ந்த. மறுகு - வீதி. கடவிய - என்பதும் பாடம். |
இப்பாட்டு முதல் 4 பாட்டுக்களும் எதிர்கொள் மகிழ்ச்சிக்கேற்ற சந்தயாப்பிலமைந்த யாப்பு அமைதியும் கவிநயமும் கண்டுகொள்க. 23 |
| 4252. | அரிவையர் தெருவி னடம்பயி லணிகிளர் தளிரடி தங்கிய பரிபுர வொலிகள் கிளர்ந்தன பணைமுர சொலிகள் பரந்தன சுரிவளை நிரைகள் முரன்றன துணைவர்க ளிருவரும் வந்தணி விரிதரு பவன நெடுங்கடை விறன்மத கரியி னிழிந்தனர். 24 |
(இ-ள்) அரிவையர்......கிளர்ந்தன - தெருவிலே ஆடற் பெண்கள் நடம்பயில்கின்ற அணிகள் ஒலிக்கின்ற தளிர்போன்ற பாதங்களில் பொருந்திய சிலம்புகளின் ஒலிகள் மேலெழுந்தோங்கின; பணை....பரந்தன - பெரிய முரசங்களின் ஒலிகள் பரவியன; சுரிவளை...முரன்றன - சுழியுடைய சங்குக் கூட்டங்கள் வரிசைகளாக ஒலித்தன; துணைவர்கள்....இழிந்தனர் - தோழர்கள் இருவரும் வந்து அழகுவிரிந்த அரண்மனையில் நீண்டவாயிலில் தாம் செலுத்திவந்த வல்லமைமிக்க யானையினின்றும் இறங்கினர். |
(வி-ரை) தெருவில் அரிவையர் நடம்பயில் என்க. |
அடிதங்கிய - அடியில் அணிந்த; பரிபுரம் - சிலம்பு. |
பணைமுரசு - பெரிய முரசங்கள்; முரசு விசேடம் என்றலுமாம், கூட்டமாகிய என்பதும் பொருந்தும். பணை - பண்ணை; கூட்டம். |
சுரிவளை - சுரி - உள்ளே சுழிகளை உடைய; முரலுதல் - சத்தித்தல். |
வந்து - இழிந்தனர் - என்று கூட்டுக. |
அணி விரிதரு பவனம் - அணிவகைகள் பெருத்த; அணி - அலங்கார வகை; பவனம் - அரண்மனை; கடை - வாயில். |
முன்முறை நம்பிகள் எழுந்தருளியது முதல்முறை ஆதலின் திருவஞ்சைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பின் அரண்மனையடைந்தனர். இம்முறை நேரே அரண்மனை வாயிலுக்கு வந்தனர். முன்முறை சேரனார் அழைத்து வந்தமையும் கருதுக. 24 |
| 4253. | தூநுறு மலர்தர ளம்பொரி தூவிமு னிருபுடை யின்கணும் நான்மறை முனிவர்கண் மங்கல நாமநன் மொழிகள் விளம்பிட மேனிறை நிழல்செய வெண்குடை வீசிய கவரி மருங்குற வானவர் தலைவரு நண்பரு மாளிகை நடுவு புகுந்தனர். 25 |
(இ-ள்) தூநறும்.....தூவி - தூய மணமுடைய மலர்களையும் முத்துக்களையும் பொரியினையும் கலந்து தூவி; முன்.....விளம்பிட - முன்னே இரண்டு பக்கங்களிலும் நான்மறைகளும் வல்ல முனிவர்கள் மங்கலமுடைய நன்மொழிகளைச் சொல்ல; மேல்நிறை...குடை - மேலே வெண் கொற்றக்குடை நிறைந்த நிழல் பரப்ப; வீசிய கவரி மருங்குற - வீசப்படும் சாமரைகள் பக்கங்களிற் பொருந்த; வானவர் தலைவரும்..புகுந்தனர் - சேரனாரும் அவரது தோழராகிய நம்பிகளும் அரண்மனையின் நடுவுட் புகுந்தருளினர். |