| | எதிர்வந்த திறைஞ்றுசு மமைச்சர்குழா மேறு மிவுளித் துகளார்ப்ப மதிதங் கியமஞ் சணியிஞ்சி வஞ்சி மணிவா யிலையணைந்தார். 22 |
(இ-ள்) உதியர்.....ஆர்ப்ப - சேரமன்னரது பெரிய சேனை கடல் கிளர்ந்தது போல ஆரவாரிக்க; கதிர்வெண்.....ஆர்ப்ப - ஒளிவீசும் வெள்ளிய திருநீற்றினை அணிந்த அன்பர் கூட்டங்கள் கங்கையாறு முழங்கி எழுந்தது போல ஆரவாரிக்க; எதிர்...துகள் ஆர்ப்ப - எதிரே வந்து வணங்கும் அமைச்சர் கூட்டங்கள் ஏறிவரும் குதிரைகளின் காலிலிருந்து எழும்பும் மண்தூசிகள் எங்கும் எழுந்து பரவ; மதி....அணைந்தார் - சந்திரன் தவழும் மேகங்கள் படியும் மதில்களையுடைய வஞ்சிமா நகரத்தின் அழகிய வாயிலை அணைந்தனர் ( இவ்விரு பெருமக்களும்). |
(வி-ரை) ஓதம் கிளர்தல் கடலோசையினையும், கங்கை கிளர்தல் - தூய வெள்ளிய பரப்பினையும் உணர்த்தின. கங்கைநீர் - மிகத்தூய வெண்மை நிறமுடையது என்பது. |
சேனை - நம்பிகளை எதிர்கொள்ளச் சேரனாருடன் வந்தவை. |
அன்பர் கூட்டம் - நம்பிகளுடன் வந்தவர்; சேனை ஆர்த்தமை -சேரனார் செயலைக்கண்டு “நல்ல தோழர் நம்பெருமா டமக்கு நம்பி” (3895) என்று கருதியதனாலும், அன்பர் ஆர்த்தமை - சேரனாரது அன்பின் பெருமை கண்டதனாலுமாம். கங்கை கிளர்ந்ததென - “மன்னியொளிர் வெண்மையினாற் றூய்மையினால்....கங்கையணைந்ததெனும் கவின்காட்ட” (2550) என்றது காண்க. கங்கை நீர் வெண்ணிற முடையது. “கங்கையும் ....கூடிய....” (பொன்வ - 90). |
இவுளித்துகள் - குதிரைகள் வேகத்தில் செல்லும் போது கிளம்பும் காற்றூசி; இவுளி - குதிரை. |
வஞ்சி - சேரனாருடைய தலைநகரம். திருவஞ்சைக்களம் -கொடுங்கோளுர் என்பது (3890 - 3892) பார்க்க. இரண்டும் ஒன்று சேர்த்துக் கூறப்படுவன. 22 |
| வேறு |
| 4251. | ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைக ளந்தணர் வாரண மதமழை சிந்தின வாசிகள் கிளரொளி பொங்கின பூரண கலச மலிந்தன பூமழை மகளிர் பொழிந்திடுந் தோரண மறுகு புகுந்தது தோழர்க ணடவிய குஞ்சரம். 23 |
(இ-ள்) ஆரண....அந்தணர் - வேதப்பதங்களைச் சொல்லுமி ஒலி முழங்கியிட வேதியர்கள் குணலைக்கூத் தாடினார்கள்; வாரண.....சிந்தின - யானைகள் மழைபோல மதநீர் சொரிந்தன; வாசிகள்...பொங்கின - குதிரைகள் கிளர்ச்சியின்ஒளிகள் வீசின; பூரண...மலிந்தன - நிறை குடங்கள் எங்கும் மலிந்திருந்தன; பூ...குஞ்சரம் - மங்கலப் பெண்கள் பொழியும் பூமழை சிந்துகின்ற தோரண நிறைந்த வீதியினுள்ளே தோழர்கள் ஊர்ந்த யானை புகுந்தது. |
(வி-ரை) ஆரண....அந்தணர் - வேதியர்கள் வேதியர்களை வேதங்களை முழக்கிக் குணலைக் கூத்தாடினர்; குணலை - கைதட்டி ஆரவாரித்து ஆடும் ஒருவகைக் கூத்து, ஆனந்த மிகுதியால் வருவது. “கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே” (சித்தி). |
வாரணம் - வாசிகள் - சேனை வந்தமையால் யானைகளும் குதிரைகளும் நிரம்பியிருந்த நிலை குறித்தது. |