பக்கம் எண் :

வெள்ளானைச் சருக்கம்598

 
     (வி-ரை) விட்ட - முன் பாட்டில் "சென்றதம் மனத்தொடு பரியும்முன்
செலவிட்டார்" (4263) என்று கூறியவாறு மனவேகத்தில் விட்ட.
 
     வெம்பரி - தாம் விரும்பி யூர்ந்த குதிரை; வெம்மை - விருப்பம்.
 
     புவிமுதல் வேந்தர் - தமிழ் மூவேந்தர்களுள் முதலில் வைத்தெண்ணப்பட்டவர்;
முதன்மை என்றலுமாம்; இவ்வொருமரபே இன்றும் ஒருவாறு அரசு தாங்கி நிலவி
வருதல் காண்க.
 
     விதியாலே - சிவாகம விதிப்படி; விதித்தல் - ஆக்ஞை செய்தலுமாம். விதி -
நியதி என்று கொண்டு அக்குதிரையின் மேல் விண்ணிற் சென்று கயிலை சாரும்
விதியுண்மையாலே என்றலுமாம்.
     இட்டமாம் - தமக்கு இட்டமாகிய; மிகக் கைவசமாய்த் தாம் விரும்பிக் கணித்து
வரும்; இட்டம் ஆம் - விருப்பத்தை முற்றிவைக்கும் என்றலுமாம். இப்பொருளில்
ஆம் - ஆக்குவிக்கும் எனப் பிறவினைப் பொருளில் வந்தது.
 
     சிவமந்திரம் - இதுபற்றிச் சிவாகமம் வல்ல அனுபவமுடைய தேசிகர்பால்
அறிந்துகொள்க.1 ஓதலின் - ஓதலினால்; தரையில் ஓடும் குதிரை ஆகாயத்தில் எழுந்து
பாய்ந்து ஓடுதல் யாங்ஙனம் என்றையுற்று அவநம்பிக்கைப்படும் மாக்களுக் கறிவுறுத்தக்
காரணங் கூறியருளினார்; சடப்பொருள்களாகிய பொறிகளும் ஓர் சடசத்தியதாகிய
விசையினால் நிலத்தினின்று ஆகாயத்தில் எழுந்து இந்நாளிற் பறக்கக் காண்போமாகில்,
உயிரும் அறிவும் உள்ள பொருளாகிய குதிரை ஓர் சித் சத்தியாகிய மந்திரவலிமையால்
ஆகாயத்தில் பறத்தல் எளிதேயாம் என்று விடுக்க; சட சத்தியில் நம்பிக்கைகொண்டு
மந்திர சிற்சத்தியில் நம்பிக்கை யில்லையேல் அது வேறுவகையால் விடுக்கற் பாலதாம்;
ஈண்டு விடுத்தல் மற்றொன்று விரித்தலாய்ப் பெருகுமென்று விடுக்க; இன்னோர்க்கு
இறைவர் அருள்வாராக என்று வேண்டுவோம்.
 
     விசும்பு எழு - விசும்பிண்கண் எழ என்று ஏழனுருபு விரிக்க.
 
     பைந்தெரியல் - பசிய மாலை; பசுமை - ஈண்டுப் புதுமையும் அழகும் குறித்தது.
 
     மாதங்கம் - யானை; ஈண்டு வெள்ளானையினைக் குறித்தது; முட்ட - அணுக.
 
     முன்வலங்கொண்டு - முதலில் வலமாகச் சூழ்ந்து; அதன் முன்னாகச்
சென்றது
- என்க; வினைமுற்று முன்வந்தது விரைவுப்பொருட்டு; மற்று - அசை.
 

36
 

4265. உதியர் மன்னவர் தம்பெருஞ் சேனையி னுடன்சென்ற படைவீரர்
கதிகொள் வாசியிற் செல்பவர் தம்மைத்தங் கட்புலப் படுமெல்லை
எதிர்வி சும்பினிற் கண்டுபின் கண்டில ராதலி னெல்லாரும்
முதிரு மன்பினி லுருவிய சுரிகையான் முறைமுறை யுடல்வீழ்த்தார்.
 
     (இ-ள்) உதியர்....வீரர் - சேரமான் பெருமாணாயனாரது பெருஞ்
சேனையினுடனே சென்ற படையின் வீரர்கள்; கதிகொள்...ஆதலின் மிக்க வேகத்தில்
விண்ணின் மேற் செல்கின்ற தமது மன்னரைத் தமது கண்ணிற்கு புலப்படும் எல்லை
அளவும் ஆகாயத்திற் கண்டு அதன்மேல் கண்டிலராயினர்; ஆதலின்; எல்லாரும்.....
_____________________
     1 இது பரியை விரைந்த செலவினதாக்கு விக்கும் பஞ்சாக்கரம். அஷ்ட கர்ம
பஞ்சாக்கர மாறுதல் பேதங்களுள் ஒன்றாகிய உச்சாடன கர்மாவின் பிரிவைச் சேர்ந்த
மிருக உச்சாடன பஞ்சாக்கரத்துட்பட்ட அசுவமனோகதி பஞ்சாக்கர மென்பது
ந.சிவப்பிரகாச குருக்களையா அவர்கள் குறிப்பு.