பக்கம் எண் :

வெள்ளானைச் சருக்கம்600

 
சேவகத்தினை (பணியினை) ஏற்றனர்; தனித்தொண்டர்....முன் வைத்து - ஒப்பற்ற
பெருந்தொண்டராகிய நம்பிகள் மேல் கொண்ட மும்மதம் அருவியாகப் பாய்கின்ற
வெள்ளானைக்குக் கொற்றக் குதிரை முன்னே செல்ல அமைய; சேரர் வீரரும்....நோக்கி
- சேரர்களின் வீரத்தலைவராகிய சேரனாரும் அம்பலவாணரது கயிலைத் திருமலையின்
திசையினை நோக்கிச் சென்றனர்.
 
     (வி-ரை) வீரயாக்கை - போரிலும்; பிறாண்டும் உடல்விடும் வீரர்கள்
மேற்கொள்ளும் நுண்ணிய உடல் (சூக்கும வுடம்பு) வீரயாக்கை எனவும், அவர்கள்
அடைவது வீர சுவர்க்கம் எனவும் படும்.
     சென்று போய் - சென்று - என்பது இவ்வுலக நில எல்லை யளவும், போய்
என்பது விண்ணுலகிலும் சென்ற நிலைகள் குறித்தன.
 
     வில்லவர் பெருமான் - வில்லவர் - சேரர்; மரபுப் பெயர். "தென்னவன்
செம்பியன் வில்லவன் சேருமூக்கீச் சரத்தடிகள்" (பிள் - தேவா) விற்கொடியுடைய
காரணம் பற்றிப் போந்த பெயர் என்பர். சேரமானாரது திருவுருவம் கையில் வில்
ஏந்திய கோலத்துடன் திருவஞ்சைக்களத்தில் உள்ளது. வீரர்கள் சென்றடைந்த தலைமை
குறிக்க இப்பெயராற் கூறினார்; மேல் "சேரர் வீரர்" என்பதும் காண்க.
 
     சேவகம் - பணி; சேவை தனித்தொண்டர் - நம்பிகள்.
 
     முன் வைத்து - முன்னே சென்றவாறே.
 
     வெள்ளானைக்கு முன் வைத்துச் சென்றனர் - ஆகாய வீதியில் திருமலைத்
திசை நோக்கி வெள்ளானையும் அதன் முன்பு வயப்பரியுமாக இவ்வாறு சென்றன
என்பது.
 
     சென்றனர் - திருமலைத் திசைநோக்கி - ஆகாய வீதியாகலின் திசையறி
கருவியாக ஒரு குறிக்கோள் வேண்டுமாதலின் அது திருமலை நோக்கியவாறே
பொருந்த என்பதாம். திருமலை - கயிலை. "திருமலை, அதிர வார்த்தெடுத் தான்"
(அரசு - தேவா).

38
 

4267. யானை மேல்கொண்டு செல்கின்றபொழுதினிலிமையவர்குழாமென்னுந்
தானை முன்செலத் "தானெனை முன்படைத் தா"னெனுந் தமிழ்மாலை
மான வன்றொண்டர் பாடிமுன் னணைந்தனர் மதிநதி பொதிவேணித்
தேன லம்புதண் கொன்றையார் திருமலைத் தென்றிசைத் திருவாயில்.
 
     (இ-ள்) யானை....பொழுதினில் - வெள்ளை யானையின்மேல் ஏறிக்கொண்டு
செல்கின்றபோது; இமையவர்....முன் செல - தேவர்களின் கூட்டம் என்னும் சேனை
முன்னே செல்ல; தானெனை...பாடி - "தானெனை முன் படைத்தான்" என்று
தொடங்கும் தமிழ்மாலையினைப் பெருமையுடைய வன்றொண்டர் பாடி;
மதிநதி....திருவாயில் - தேன் பிலிற்றுகின்ற குளிர்ந்த கொன்றை மலர் சூடிய இறைவரது
திருமலையின் தென்றிசைத் திருவாயிலின்; முன் அணைந்தனர் - முன்னே சேர்ந்தனர்.
 
     (வி-ரை) யானை - "சென்று, ஆரூரனை இந்த யானையின்மேல் ஏற்றிக்
கொண்டு வாருங்கள்" என்று அயன் முதற்றேவர்களுக்குச் சிவபெருமான்
கட்டளையிட்டனுப்பிய வெள்ளை யானை. 4254.
 
     "தானெனை முன் படைத்தான்" எனும் - இது நம்பியாரூரர் கயிலை
மலையினை நோக்கி வரும்போது வழியிற் பாடியருளிய பதிகத்தின் தொடக்கமாகிய
முதற்குறிப்பு. தானை - இங்குக் கூட்டம் என்ற பொருளில் வந்தது. சேரர்க்கு ஒப்ப
நம்பிகளுக்கும் சேனை முன் சென்றது என்றதும் குறிப்பு.