மானம் - பெருமை; முன் அணைந்தனர் - முன் - உடன்வந்த சேரமான் பெருமாளுக்கு முன்பு. |
திருமலை - கயிலைமலை. அடைமொழியின்றியே சிறப்புப் பற்றி அறியப்படுவது. |
தென்றிசைத் திருவாயில் - தென்றிசையினின்றும் வடக்கிலுள்ள கயிலையினை நோக்கி நம்பிகள் வருகின்றாராதலின் தெற்குத் திருவாயிலின் வந்தணைந்தனர் என்க. |
கொன்றையார் - திருவஞ்சைக் களத்தினின்றும் நம்பிகள் எழுந்தருளி வருகின்றாராதலின் அப்பதியின் சிறந்த தலமரமாகிய கொன்றையினைப் பற்றிக் கூறிய குறிப்பும் காண்க. |
| 39 |
திருதொடித்தான் மலை |
திருச்சிற்றம்பலம் பண் - பஞ்சமம் |
தானெனை முன்படைத்தா னதறிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர்கொள்ள மத்தயானை யருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய்தா னொடித்தான்மலை யுத்தமனே. (1) | |
அரவொலி யாகமங்க ளறிவாரறி தோத்திரங்கள் விரவிய வேதவொலி விண்ணெலாம்வந் தெதிர்ந்திசைப்ப வரமலி வாணன்வந்து வழிதந்தெனக் கேறுவதோர் சிரமலி யானைதந்தா னொடித்தான்மலை யுத்தமனே. (8) | |
இந்திரன் மால்பிரமன் னெழிலார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளவென்னை மத்தயானை யருள்புரிந்து மந்திர மாமுனிவ "ரிவனா?ரென" வெம்பெருமான் "நந்தம ரூர"னென்றா னொடித்தான்மலை யுத்தமனே. (9) | |
ஊழிதோ றூழிமுற்று முயர்பொன்னொடித் தான்மலையைச் சூழிசை யின்கரும்பின் சுவைநாவல வூரன்சொன்ன ஏழிசை யின்றமிழா லிசைந்தேத்திய பத்தினையும் "ஆழிகட லரையா! வஞ்சையப்பர்க் கறிவிப்பதே" (10) | |
| திருச்சிற்றம்பலம் |
பதிகக்குறிப்பு:- திருவஞ்சைக்களத்தினில் வணங்கும்போது, அலைப்புறு மனை வாழ்க்கை சரியவே "தலைக்குத்தலை மாலை" என்று தொடங்கிய திருப்பகத்தி னுட் குறிப்பு "இவ்வுலகினிற் பாச மடுத்த வாழ்க்கையை யறுத்திடவேண்டு" மென்று நம்பிகள் பாடி, அப்பதிகத்தின் 8-வது திருப்பாட்டில் "வெறுத்தேன் மனைவாழ்க்கையை விட்டடியேன்" என்று முத்தி விண்ணப்பம் செய்தனர். திருக்கயிலையில் இறைவர் அயன் முதலிய தேவர்களுக்கு அருள்செய்து "நம் ஊரனை உம்பர் வெள்ளானையி னுடனேற்றிக் கொண்டிங்கு வாரு"மென்று ஆணையிட்டருளியபடி அவர்கள் திருவஞ்சைக்களத்திற் றிருக்கோயில் வாயிலில் வந்திருந்தனர். நம்பிகள் பதிகத்தினை முடித்து வலம் வந்து திருவாயிலில் வரும்போது அவர்கள் "இறைவரது அருளிப்பாடு" எனப் போற்றி, "ஏவல்" என்ற இறைவரது ஆணையை அறிவித்து நம்பிகளை வலங்கொண்டு யானையின் மீதேற்றினர். ஐவகை நாதமுமெழுந்தார்த்தன. |