| | இவ்வாறு நம்பிகள் கழறிற்றறிவாரை மனத்தினிற் கொண்டு வெள்ளை யானையின் மீது திருக்கயிலையினை நோக்கிச் செல்கின்றபோது, இறைவரது திருவருளை எண்ணியெண்ணி மனமுருகி வழியிடை இப்பதிகத்தை அருளிக்கொண்டே செல்கின்றனர். இறைவரது பேரருளினை வியந்து போற்றிய குறிப்புடையது இத்திருப்பதிகம். | குறிப்பு :- இத்திருப்பதிகம் நம்பிகளது சரிதத்துக்குப் பேராதரவாகிய அகச் சான்றுகள் பலவும் கொண்டு விளங்குகின்றது. | பதிகப்பாட்டு குறிப்பு :- (1) தானெனை.....பாடல் - இறைவன் என்னை தென்றிசைமீது தோன்றுக என்று ஆணையிட்டுத் திருநாவலூரில் பிறக்கும்படி படைத்தான்; சிவன் படைப்பு என்பதும் குறிப்பு; அது அறிந்து - அதனை முன் அறியாமலிருந்தேன்; அவன் வல்வழக்கிட்டு ஆளாகக் கொண்டபின் அதனை அறிந்து; தன் பொன்னடிக்கே நான் எ(ன்)ன பாடல், "அருச்சனை பாட்டேயாகும்" என்ற ஆணையின்படி பாடினேன். தன் பொன்னடிக்கே நான் பாடலாயினேன்; என்ன - என் பாடல்கள் தாம் என்ன? சிறியனவேயாம்; நாயினேனைப் பொருட்படுத்தி - அப்பாடல்களுள் முத்தி விண்ணப்பம் செய்த (திருவஞ்சைக்களம்) பாடலினைக் கேட்டு நாயினேனையும் பொருளாகக்கொண்டு; வானெனை....யானையருள் புரிந்து - அயன் முதல் வானவர் வந்து எதிர்கொள்ள வெள்ளை யானையினை அருளி; இது சரித ஆதரவாகிய அகச்சான்று; இதனை, மேல் வரும் எல்லாப் பாடல்களிலும் குறித்துப் பாடித் திருவருளின் பெருமையை நினைந்து நினைந்துருகிய நிலையினைக் காண்க. "எனை ஏறவைத்த ஆனை";-(2) "மால்விசும்பில் அழகானை யருள்புரிந்த துந்தரமோ?" (3) "அமரரெல்லாஞ், சூழவருள் புரிந்து தொண்டனேன்பர மல்லதொரு, வேழ மருள்புரிந்தான்" (4) "வெள்ளை யானையின் மேல் என்னுடல் காட்டுவித்தான்" (5) "வெஞ்சின வானை தந்தான்" (6) "யானையேறி" (7) "யானை தந்தான்" (8) "மத்தயானை யருள்புரிந்து" (9) என்பன காண்க; ஊனுயிர் வேறு செய்தான் - ஊன் - கருவி கரணங்களுடன் கூடிய உடல்; உயிர் - ஆன்மா; இவற்றை வேறு செய்தலாவது, அவை இவ்வுலகிற் சரித்த நிலையினின்றும் வேறு தன்மையனவாகச் செய்தல்; ஊன் வேறு செய்தல் - பசுகரணங்கள் பதிகரணங்களாகச் செய்தல்; பகல் விளக்குப்போல அருளொளியினடங்கச் செய்தல்; உயிர் வேறு செய்தல் - மாயா கருவிகளானறிந்து ஏகதேசப்படாமல் அருளொளியி னடங்கி வியாபகமாக அறியச்செய்தல். மேல், என்னுடல் காட்டுவித்தான் (5) என்கின்றமையால் நம்பிகள் இவ்வுலகிற் சரித்த திருவுடம்பினுடனே கயிலைக்குச் சென்று அங்கு வீற்றிருக்கின்றார் என்பது பெறப்படும்; இதுபற்றியே "ஞானவாரூரரைச் சேரரை யல்லது நாமறியோம், மானவ யாக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண், வானவ ராலு மருவற் கரிய வடகயிலைக், கோனவன் கோயிற் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டத்திலே" (திருத்தொண் - திருவந் - 86) என்ற நம்பியாண்டார் நம்பிகள் திருவாக்குமெழுந்தது. "பாதமேத்துவார், வேறுபட்ட சிந்தையார், விண்ணி லெண்ண வல்லரே" (தேவா - பிள் - ஆனைக் - 2) என்றது காண்க. (2) ஆனை....கொல்லோ - முன் யானையினை உரித்ததோர் கோபமாகியது பகையருட் செயல். இப்போது யானைக்கும் என் பொருட்டு அருள்செய்தது பிரசாதமாகிய அருட்செயல். அப்பகை இதனால் மீளும்படியோ? - மாற்றும் கருத்தோ? என்றபடி; "முன்றான் கடனஞ்ச முண்ட வதனாலோ? பின்றான் பரவைக் குபகாரஞ் செய்தாயோ?"(கோடிக் - குழகர் - நம்பி) என்ற கருத்துக் காண்க. ஊனை உயிர் வெருட்டி - உயிரின் வீடுபேறு கருதி உடம்பினை வெறுத்து; ஊன் - உடம்பு; ஆகு | | |
|
|