| | பாரில் வேதியர் திருப்பிட வூர்தனில் வெளிப்படப் பகர்ந்தெங்கும் நார வேலைசூ ழுலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே. 52 |
(இ-ள்) சேரர்.....திருவுலாப்புறம் - சேரர்பெருமான் விண்ணப்பித்தருளிய அந்தத் திருவுலாப் புறப்பாட்டினை; அன்று....தரித்து - (விண்ணப்பித்த) அன்று சாரல்களையுடைய வெள்ளியங் கயிலை மலையினில் உடனிருந்து கேட்ட - மாசாத்தனார் - அதனைத் தரித்து; இந்த.....பகர்ந்து - இந்த நிலவுலகத்தில் வேதியர்கள் வாழும் திருப்பிடவூரில் வெளிப்படச் சொல்லியருளி; எங்கும்.....நலத்தாலே - நீர்மிகுதியுடைய கடல் சூழ்ந்த இந்நிலவுகினில் எங்கும் நன்மையாலே விளங்கியிட நாட்டியருளினர். |
(வி-ரை) நம்பிகளது பதிகம் வந்து வழங்கிய வரலாற்றினை விளக்கிய ஆசிரியர், அஃதற்றாயின், கயிலையில் இறைவரது திருமுன்பு சேரனார் கேட்பித்த திருவுலாப்புறம் இந்நிலவுலகில் வந்து வழங்குமாறு யாங்ஙனம்? என்னும் ஐயத்தினை நீக்குதற்கு, அவ்வரலாறு கூறியது இத்திருப்பாட்டு. |
சேரர்....திருவுலாப்புறம் - சேரனார் திருகயிலையில் இறைவர் திருமுன்பு கேட்பித்த திருவுலா. (4275). |
கயிலையிற் கேட்ட மா சாத்தனார் - கயிலை மலையில் அன்று உடனிருந்து கேட்ட மாசாத்தனார். ஐயனார் - அரிகர புத்திரர் என வழங்கப்படுவர். தரித்து - முற்றும் மேற்கொண்டு எடுத்து; சாத்தன் - தீயோரைத் தண்டிப்பவன்; சாத்திரங்களில் வல்லவன். |
பிடவூர்தனில் வெளிப்படப்பகர்ந்து - எங்கும் விளங்கிட நாட்டினர் - பிடவூரினில் வெளிப்படப் பகர்ந்த வகையினாலே உலகில் விளங்கிடச் செய்தருளினர். நாரம் - நீர். நாரம் - நார்களின் தொகுதி - மக்கட் கூட்டம் எனினுமாம். |
| 52 |
தலவிசேடம் :- திருப்பிடவூர் - இது தேவார வைப்புத்தலங்களுள் ஒன்று. திருச்சிராப்பள்ளியினின்றும் பிரம்பலூருக்குப் போகும் கற்சாலைப் பெருவழியில் திருச்சிராப்பள்ளியினின்றும் 15 நாழிகையளவிலுள்ள சிறுகனூருக்கு வட மேற்கே இரண்டு நாழிகை யளவில் அடையத்தக்கது. துறையூருக்குக் கிழக்கில் 12 நாழிகையிலும் அடையலாம். இப்போது திருப்பதட்டூர் - என வழங்குகிறது; இக்கோயிலினுள் பழங்காலக் கல்வெட்டுக்கள் பல உண்டு. அவற்றால், பிடவூர் நாட்டுப் பிடவூர் என்பது இதன் பெயர் என விளங்குகின்றது. கல்வெட்டுக்களில் இதற்கு மூவாயிர நல்லூர் - பிரம்மதேயம் - என்றும் பெயர் கூறப்படுகிறது. "உறந்தைக் குணாது, அருங்கடிப் பிடவூர், அறப்பெயர்ச் சாத்தன்" (புறம் 395-19-21) எனவருமாறு இவ்வூர் உறையூருக்குக் கிழக்கில் உள்ளது; இங்கு மாசாத்தனார் கோயில் விளக்கம். ஆனால் இப்போது கிலமாக உள்ளது. இவர் திருவுருவத்தில் கையில் திருவுலா ஏடு அமைந்தபடி உள்ளது; இவர் அரங்கேற்றிய ஐயனார் என வழங்கப்படுவர் என்பது கன்ன பரம்பரை; திருவஞ்சைக்களத்திலும் சாத்தனார் கோயில் தாபிக்கப்பட்டுள்ளதும் காண்க.1 மூலமூர்த்தி சுயம்பு; பதஞ்சலி வியாக்ரபாதர் இவர்களுக்குச் சநி உபாதி நீங்கின இடம். பிரமன் 12 இலிங்கங்கள் வைத்துப் பூசித்த பதி. பிரமனது பெருவடிவம் பெரு வனப்பினதாய் முதற் சுற்றில் உள்ளது. முருகப் பெரு ___________________________ |
1 இன்னும் இதுபற்றிய பல வரலாறுகள் "ஞானசம்பந்தம்" ஏழாவது ஆண்டு மலரில் "தமிழ்" நூல்களும் கல்வெட்டுக்களும், என்ற கட்டுரையில் அன்பர், திரு.சுந்தரேச வாண்டையார் எழுதியுள்ளவற்றுள்ளும், அன்பர், திரு. பஞ்சநதம் பிள்ளை எழுதிய தலவரலாற்றுள்ளும் காண்க. |