கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற்
கனிதன்னை
நண்ணவல்லோர்கட் கில்லைநமன்பால்
நடலையே. 6
1097. முன்னொருகாலத் திந்திரனுற்ற
முனிசாபம்
பின்னொருநாளவ் விண்ணவரேத்தப்
பெயர்வெய்தித்
தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன்
சார்பென்பர்
கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார்
கோயிலே. 7
____________________________________________________
வழிபட வல்லவர்கட்கு, நமனால் வரும்
துன்பங்கள் இல்லை.
கு-ரை: தேவர்களுக்காக விஷத்தை
விரும்பி உண்டவனை, அவர்களுக்கு அமுதம் அளித்து,
எல்லா உலகிற்குங் கண்ணானவனை, கண்ணார்கோயில்
கனியை அடையவல்லவர்க்கு எமன் பால் இன்னல்
இல்லை என்கின்றது.
வேலை - கடல். உண்ணவன் - உண்டவன்.
நடலை - துன்பம்.
7. பொ-ரை: முன்னொரு காலத்தில்
கௌதம முனிவரால் விளைந்த சாபத்தால் உடல்
எங்கும் பெண் குறிகளோடு வருந்தித் தன்னை
வழிபட்ட இந்திரனுக்குப் பின்னொரு நாளில்
தேவர்கள் புகழ்ந்து போற்றுமாறு தண்ணருளோடு
அச்சாபத்தைப் போக்கி அவற்றை ஆயிரம்
கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்த சிவபிரான்
எழுந்தருளிய இடம், கன்னியர்கள் நாள்தோறும் கூடி
வந்து வழிபடும் தலமாகிய கண்ணார்
கோயில்என்பர்.
கு-ரை: கௌதம முனிவரால் இந்திரன்
அடைந்த சாபத்தைத் தேவர்கள் வேண்டிக்கொள்ளப்
போக்கி ஆயிரங்கண் அளித்த கடவுள் இடம் இது
என்பர். இத்தலத்து வரலாற்றைக் குறிப்பது இது.
சார்பு - இடம். துன் அமர் - நெருங்கியிருக்கின்ற.
|