1098. பெருக்கெண்ணாத பேதையரக்கன்
வரைக்கீழால்
நெருக்குண்ணாத்தன் னீள்கழனெஞ்சில்
நினைந்தேத்த
முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர்
முன்னீந்த
திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ்
சேர்வாரே. 8
1099. செங்கமலப்போ திற்றிகழ்செல்வன்
றிருமாலும்
அங்கமலக்கண் ணோக்கரும்வண்ணத்
தழலானான்
தங்கமலக்கண் ணார்திகழ்கோயில்
தமதுள்ளம்
அங்கமலத்தோ டேத்திடவண்டத்
தமர்வாரே. 9
___________________________________________________
8. பொ-ரை: அன்போடு வழிபட்டால்
ஆக்கம் பெறலாம் என்று எண்ணாத அறிவிலியாகிய
இராவணன் கயிலையைப் பெயர்த்த போது அதன்கீழ்
அகப்பட்டு நெருக்குண்டு நல்லறிவு பெற்று விரிந்த
புகழை உடைய தன் திருவடிகளை அவன் நெஞ்சினால்
நினைந்து போற்றிய அளவில் அவனுக்கு
அழிக்கமுடியாத, ஒளியினை உடைய வாளையும் தேரையும்
முற்காலத்தில் வழங்கியருளிய சிவபிரான்
வீற்றிருக்கும் தலமாகிய திருக்கண்ணார் கோயில்
என்று கூறுவார் சிவலோகம் சேர்வர்.
கு-ரை: இராவணன் கைலையின் கீழ்
நெருக்குண்ணாதபடி திருவடியிலிருந்து தோத்திரிக்க,
வாளும் தேருங் கொடுத்த இறைவன் எழுந்தருளியுள்ள
இடத்தைப் பரவுவார் சிவலோகம் சேர்வார்
என்கின்றது. பெருக்கு - ஆக்கம். பேதை - அறிவிலி.
வரை - கைலைமலை. நெருக்குண்ணா - நெருக்குண்டு
என்றுமாம்.
9. பொ-ரை: செந்தாமரைப் போதில்
வீற்றிருக்கும் பிரமனும் திருமாலும் அழகிய தங்கள்
கமலம் போன்ற கண்களால் நோக்கிக்
|