பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்101


நாயனாரை நக்கநாயனார் என்றும் கல்வெட்டுகள் காட்டுகின்றன.

3. திருவலிதாயம்

தலம்:

தொண்டைநாட்டில் விளங்கும் தேவாரத் தலங்களில் 21வது தலம். சென்னைப் பெருநகரின் மேல்பால் உள்ளது. சென்னை மையப் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகளில் செல்லலாம். இத்தலம் பாடி என இன்று வழங்குகிறது. பாரத்வாஜமகரிஷி, வியாழன், அநுமான் இவர்கள் வழிபட்டு முத்தி பெற்றதாகத் தல புராணம் கூறும். கஜப்பிரஷ்ட விமானம். சுவாமி பெயர் வலிதாயநாதர்; அம்மை பெயர் தாயம்மை; இங்கேயுள்ள கிணற்று நீர் மிக்க சுவையானது.

கல்வெட்டு:

இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள் 14 உள்ளன. அவற்றில் சுவாமி பெயர் திருவலிதாயமுடைய நாயனார் என வழங்கப்பெறுகிறது. அம்மை பெயர் திருவீதி நாச்சியார் என்பது1. இன்ன அரசர் காலத்தது என்று அறியப் பெறாத கல்வெட்டு ஒன்று, திருவெண்காட்டிலிருந்து அழகிய திருச்சிற்றம்பலமுடைய நாயனாரை எழுந்தருள்வித்துப் பிரதிஷ்டை செய்து, அதனைப் பூசிக்க, அந்தணரையும் அங்கிருந்து குடியேற்றி, அவர்களுக்கும் உணவுக்காக ஜயங்கொண்ட சோழ மண்டலத்து, புலியூர்க்கோட்டமான சங்கமசோழவள நாட்டு அம்பத்தூர் நாட்டு திருவலிதாயத்தில் நிலம் விட்டதாகக் கூறுகிறது2. திருஞானசம்பந்த நாழி என்னும் மரக்காலால் நெல் அளந்து கொடுக்கும்படியும் எழுதியுள்ளது. திரிபுவன சக்ரவர்த்தியான இராஜராஜசோழன் தமது ஆட்சி 28ஆம் ஆண்டில் க்ஷேத்ரபாலப் பிள்ளையார் கோயிலையும் கட்டி, நிவேதனத்திற்காக நிலமும் விட்டான்3. விஜயகண்ட கோபாலதேவர் என்பவர் காஞ்சிபுரத்திலிருந்து நடனமாதரைக் கொண்டுவந்து குடியேற்றினார். சுவாமிக்கும் அம்மை திருவீதி நாச்சியாருக்கும் ஆபரணங்களும், பாத்திரங்களும் வழங்கினார்4. இராஜராஜன் காலத்தில் சாளுக்கிய நாரணன் யாதவராயன் என்பவனால் பாடியைச் சேர்ந்த சிந்தாமணிபுரம் என்னும் இடத்தில் இருவீடுகளும் இரு நந்தவனங்களும் வழங்கப் பெற்றன. பரமேஸ்வரமங்கலத்துச் சிலம்பூர்

__________________________

1-217 of 1910, 2-214 of 1910, 3-216 of 1910, 4-217 of 1910.