| 
 
    1153. அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம் மலைமகள் கூறுடையான் மலையா ரிளவாழைக் குலைமலி தண்ெ்பாழில்சூழ்
    கொடிமாடச் செங்குன்றூர் நின்ற தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே. 2 1154. பாலன நீறுபுனை திகழ்மார்பிற் பல்வளைக்கை நல்ல ஏல மலர்க்குழலா ளொருபாக மமர்ந்தருளிக் கோல மலர்ப்பொழில்சூழ்
    கொடிமாடச் செங்குன்றூர் மல்கும் நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே. 3 __________________________________________________ கு-ரை: பூணுநூல் திகழ்கின்ற திருமார்பில்
வெண்ணீறணிந்து உமையொருபாகமாகக் கொடிமாடச் செங்குன்றூரில்
நின்ற அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பார் என்கின்றது.
அணவும் - கலக்கும். கொந்து - கொத்து. 2. பொ-ரை: அலைகள் நிறைந்த குளிர்ந்த
கங்கை நதியோடு பாம்பினையும், சடையின்கண் அணிந்து,
தனது திருமேனியில் மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டுள்ளவனும்,
மலையின்கண் வளரும் குலைகள் நிறைந்துள்ள
இளவாழை மரங்களை உடைய குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்து
விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய
தலைவனுமாகிய சிவபிரானைத் தொழுவார் தடுமாற்றம்
தவிர்வர். கு-ரை: கங்கை, பாம்பு இவற்றைச்
சடைக்கணிந்து மலைமகள் கூறுடையனாக எழுந்தருளியிருக்கின்ற
செங்குன்றூர்த் தலைவனைத் தொழுவார் தடுமாற்றம்
தகர்ப்பர் என்கின்றது. அரவம் - பாம்பு. 3. பொ-ரை: பால் போன்று வெள்ளிய திருநீற்றைப்
புனைந்து விளங்கிய மார்பினோடு பல்வகை வளையல்களையும்
பாங்குறப் புனைந்த கையினளாய், மணம் கமழும் நறுமலர்களைச்
சூடிய கூந்த |