| 
 
    மாலையில் வண்டினங்கண் மதுவுண் டிசைமுரல வாய்த்த பாலையாழ்ப் பாட்டுகந்தா னுறைகோயில் பாதாளே. 10 1173. பன்மலர் வைகுபொழில்
    புடைசூழ்ந்த பாதாளைச் சேரப் பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன் தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன இன்னிசை பத்தும்வல்லா ரெழில்வானத் திருப்பாரே. 11 திருச்சிற்றம்பலம் __________________________________________________ வண்டினங்கள் மதுவுண்டு இசை முரல ஏற்புடையதான
பாலைப் பண்ணையாழில் பாடக் கேட்டு மகிழ்பவனும்
ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும். கு-ரை: பாலை யாழ்ப் பாட்டு உகந்தான்
- பாலைப்பண்ணில் விருப்புடையான். 11. பொ-ரை: பலவகையான மலர்களும் பூத்துள்ள
பொழில் புடை சூழ்ந்த பாதாளீச்சரத்தைச் சென்று
தரிசிக்குமாறு, பொன்னால் இயன்ற மாட வீடுகள் நிறைந்த
புகலி நகர் மன்னனும். தன்புகழ் உலகெங்கும் பரவி
விளங்குமாறு உயர்ந்தவனுமாகிய தமிழ் ஞானசம்பந்தன்
பாடிய இன்னிசை பொருந்திய இப்பதிகப் பாடல்கள்
பத்தையும் வல்லவர் அழகிய வானுலகின்கண் இருப்பர். கு-ரை: இப்பதிகம் வல்லார் தேவராய்
வானத்திருப்பார் என்கின்றது. |