| 
 
கரியவ னலரவன் காண்பரியஎரியவன் வளநக ரிடைமருதே. 9
 1194. சிந்தையில் சமணொடு தேரர்சொன்னபுந்தியி லுரையவை பொருள்கொளாதே
 அந்தண ரோத்தினொ டரவமோவா
 எந்தைதன் வளநக ரிடைமருதே. 10
 1195. இலைமலி பொழிலிடை மருதிறையைநலமிகு ஞானசம்பந்தன்சொன்ன
 பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
 உலகுறு புகழினொ டோங்குவரே. 11
 திருச்சிற்றம்பலம் __________________________________________________ திருமால் தாமரை மலர்மேல் உறையும் நான்முகன்
ஆகியோர் காணுதற்கரிய எரியுருவாய் ஓங்கி நின்றவனும்
ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும். கு-ரை: அரவணை - ஆதிசேடனாகிய படுக்கை.
கரியவன் - திருமால். அலரவன் - பிரமன். 10. பொ-ரை: சிந்திக்கும் திறனற்ற
சமணர்களும், புத்தர்களும் கூறிய அறிவற்ற உரைகளைப்
பொருளுடைய உரைகளாகக் கொள்ளாதீர். அந்தணர்களின்
வேத ஒலியோடு விழவொலி நீங்காத வளநகர் ஆகிய
இடைமருது எந்தையாகிய சிவபிரான் உறையும் இடமாகும்
என்று அறிந்து சென்று வழிபடுமின். கு-ரை: சிந்தை இல் சமண் - சிந்தனை
என்பதொன்றற்ற சமணர். தேரர் - புத்தர். புந்தி
இல் உரை - புத்தியற்ற வார்த்தை. ஓத்து - வேதம்.
அரவம் - ஒலி. 11. பொ-ரை: இலைகள் நிறைந்த
பொழில்கள் சூழ்ந்த இடைமருதில் உறையும் சிவபிரானை,
அருள்நலம் மிகுந்த ஞானசம்பந்தன் போற்றிப்
பாடிய பயன்மிகு தமிழ்ப் பாடல்களாலியன்ற இப்பதிகப்
பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர் உலகில்
நிறைந்து விளங்கும் புகழ்கள் அனைத்தையும் பெற்று
ஓங்கி வாழ்வர். |