பக்கம் எண் :

1090திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1247. தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல்
அறிவோரா னாம மறிந்துரைமின்
மறிகையோன் றன்முடி மணியார்கங்கை
எறிபவ னிராமன தீச்சரமே.10

1248. தேன்மலர்க் கொன்றையோன்
* * * * * * * * * * 11

திருச்சிற்றம்பலம்

_________________________________________________

நான்கு தலைகளையுடைய பிரமன் ஒரு முடியைக் காணாமையும், ஏனமாய் நான்கு கால்களையுடைய திருமால் இணையடி காணாமையும் வியப்பு என நயம் தோன்ற நின்றது.

10. பொ-ரை: மரத்தால் இயன்ற தடிபோன்ற அறிவற்ற சமண புத்தருடைய சொற்களைக் கேளாதீர். மெய்ஞ்ஞானியர்கள் வாயினால் இறைவன் திருப்பெயரை அறிந்து சொல்வீர்களாக. அப்பெருமான் மான் இளங்கன்றை ஏந்திய கையனாய்த் தனது முடியில், மணிகளோடு கூடிய கங்கை நதி அலை, மோதுபவனாய், இராமனதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான். சென்று வழிபடுக.

கு-ரை: அறிவால் அறியப்பெறாதவன், மான்கையன், கங்கையன்நகர் இது என்கின்றது. தறி - கம்பம். அறிவு - பசு, பாசஞானம். பாசஞானத்தாலும் படர் பசுஞானத்தாலும் ஈசனையறிய வொண்ணாது ஆதலின் இங்ஙனம் கூறினார். மறி - மான்குட்டி.

11. பொ-ரை: தேன் பொருந்திய கொன்றை மாலையைச் சூடியவன்.

கு-ரை: * * * * * * * * * * * * *