பக்கம் எண் :

112தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


அம்மைபெயர் மங்களநாயகி. தீர்த்தம் பிரமதீர்த்தம்.

கல்வெட்டு:

அரசாங்கத்தாரால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கர்ப்பக்கிருகத்துக்கு மேல்தளம் அடிப்பக்கத்தில் இருக்கின்றது. திரிபுவனச் சக்கரவர்த்தியான மூன்றாம் இராஜேந்திர சோழதேவன் மூன்றாம் ஆட்சி ஆண்டில் நித்தவினோத வளநாட்டு ஆவூர்க்கூற்றத்துப் பசுபதீஸ்வரமுடையார் கோயிலுக்கு நிலங்கள் அளித்தமையைத் தெரிவிக்கிறது1.

11. திருவண்ணாமலை

தலம்:

நடுநாட்டுத் தலம். புகழ்பெற்ற தமிழக நகரங்களில் ஒன்று. விழுப்புரம் - காட்பாடி வழியில் இரயில் நிலயம். அனைத்து நகரங்களிலிருந்தும் பேருந்துகள் உள்ளன. நினைக்க முத்திகிடைக்கும் தலம். இது வட ஆர்க்காடு மாவட்டத்தில் திருவண்ணாமலை கோட்டத்தின் தலை நகரம். சூரியன், பிரதத்தராஜன், அஷ்டவசுக்கள், பிரமதேவன், சந்திரன், திருமால், புளகாதிபன் முதலியோர் பூசித்துப் பேறுபெற்ற தலம். வித்தியாதரர்களாகிய இருவர் ஒரு ரிஷியின் சாபத்தால் பூனையாகவும் குதிரையாகவும் இருந்த நிலை இத்தலத்தை வலம் வந்தமையின் மாறின.

இறைவன்பெயர் அண்ணாமலைநாதர்; அருணாசலேசுவரர் என்றும் கூறுவர். இறைவிபெயர் உண்ணாமுலையம்மை; அபீதகுஜாம்பாள் என்றும் கூறுவர். விநாயகர் பெயர் ஸ்ரீ சம்பந்தவிநாயகர்; முக்குறுணி விநாயகர் என்றுங் கூறுவர். தலவிருட்சம் மகிழமரம்.

தீர்த்தம்:

கோயிலுக்கு உள்ளும் வெளியிலும் மலைப்பகுதியிலுமாக 360 தீர்த்தங்கள் உள்ளன. சிறந்தவை சிவகங்கையும், பிரம தீர்த்தமும், மலைப்பகுதியிலுள்ள அக்னிதீர்த்தமும், இந்திர தீர்த்தமும் ஆகும். இந்திர தீர்த்தத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

____________________

1-181 of 1911.