| 
 
1301. விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனல்எண்ணிலி தேவர்க ளிந்திரன் வழிபடக்
 கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய
 அண்ணல்தன் வளநக ரந்தணை யாறே. 9
 1302. மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறாஇருளுடை யிணைத்துவர்ப் போர்வையி னார்களும்
 தெருளுடை மனத்தவர் தேறமின் திண்ணமா
 அருளுடை யடிகள்தம் அந்தணை யாறே. 10
 __________________________________________________ ஐயாறு என்கின்றது. விடைத்த -
செருக்கிய. நல்வெற்பு - கயிலை. இறை - சிறிது.
இறையூன்றியது கருணையின் மிகுதியால். 9. பொ-ரை: வானகத்தே வாழ்வார்
தம்மொடு, சூரியன், அக்கினி, எண்ணற்ற தேவர்கள்,
இந்திரன் முதலானோர் வழிபட, திருமால்
பிரமர்கள் காணுதற்கு அரியவனாய் நின்ற
தலைவனாகிய சிவபிரானது வளநகர், அழகும் தண்மையும்
உடைய ஐயாறாகும். வெங்கதிரோன் அனல் என்று பாடம்
ஓதுவாரும் உளர். கு-ரை: இந்திரன், அக்கினி,
எண்ணற்ற தேவர்கள், இவர்கள் வழிபட, திருமாலும்
பிரமனும் காண்டற்கரிய கடவுள் நகர் ஐயாறு
என்கின்றது. அண்ணல் - பெருமையிற் சிறந்தவன். 10. பொ-ரை: தெளிந்த மனத்தினை
உடையவர்களே! மருட்சியை உடைய மனத்தவர்களாகிய
வலிய சமணர்களும், குற்றம் நீங்காத இரண்டு
துவர்நிற ஆடைகளைப் பூண்ட புத்தர்களும்
கூறுவனவற்றைத் தெளியாது சிவபிரானை உறுதியாகத்
தெளிவீர்களாக. கருணையாளனாக விளங்கும்
சிவபிரானது இடம் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும். கு-ரை: மருண்ட மனத்துச் சமணர்கள்
முதலாயினார்களிடம் பொருந்தாது. தெளிந்த
மனத்தவர்களே! உறுதியாகத் தெளிவுறுங்கள்; அருள்
உடைய அடிகள் இடம் ஐயாறே என்கின்றது. மருள், இருள் - அறியாமை. இணை துவர்
போர்வையினார் - இரண்டான காவிப்
போர்வையுடையவர்கள். |