| 
 
1303. நலமலி ஞானசம் பந்தன தின்றமிழ்அலைமலி புனல்மல்கு மந்தணை யாற்றினைக்
 கலைமலி தமிழிலை கற்றுவல் லார்மிக
 நலமலி புகழ்மிகு நன்மையர்தாமே. 11
 திருச்சிற்றம்பலம் __________________________________________________ 11. பொ-ரை: அலைகள் வீசும் ஆறு குளம்
முதலிய நீர் நிலைகளால் சூழப்பட்ட ஐயாற்று
இறைவனை, நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன்
போற்றிப் பாடிய இன்தமிழால் இயன்ற கலைநலம்
நிறைந்த இத்திருப்பதிகத்தைக் கற்று
வல்லவராயினார் நன்மை மிக்க புகழாகிய நலத்தைப்
பெறுவர். கு-ரை: ஐயாற்றைப் பற்றித்
திருஞானசம்பந்தர் சொல்லிய கலைமலிதமிழிவை வல்லார்
புகழ்மிகுந்த நன்மையர் ஆவர் எனப் பயன் கூறுகின்றது. 
  
    | திருஞானசம்பந்தர் புராணம் மாடநிரை மணிவீதித் திருவையாற் றினில்வாழு மல்கு தொண்டர் நாடுய்யப் புகலிவரு ஞானபோ னகர்வந்து நண்ணினார் என் றாடலொடு பாடல் அறா அணிமூதூர் அடையஅலங் காரஞ் செய்து நீடுமனக் களிப்பினொடும் எதிர்கொள்ள
நித்திலயா னத்து நீங்கி. - சேக்கிழார். |  |