| 
 
    1417. பொறியரவ மதுசுற்றிப்
    பொருப்பேமத் தாகப்புத் தேளிர்கூடி மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட கண்டத்தோன் மன்னுங்கோயில் செறியிதழ்த்தா மரைத்தவிசிற்
    றிகழ்ந்தோங்கு மிலைக்குடைக்கீழ்ச் செய்யார்
    செந்நெல் வெறிகதிர்ச்சா மரையிரட்ட
    விளவன்னம் வீற்றிருக்கும் மிழலையாமே. 2 1418. எழுந்துலகை நலிந்துழலு
    மவுணர்கடம் புரமூன்று மெழிற்கணாடி உழுந்துருளு மளவையினொள்
    ளெரிகொளவெஞ் சிலைவளைத்தோ னுறையுங்கோயில் _________________________________________________ 2. பொ-ரை: தேவர்கள் அனைவரும்
கூடி மந்தரமலைையை மத்தாக நாட்டி உடலில்
புள்ளிகளை உடைய வாசுகி என்னும் பாம்பைக்
கயிறாகச் சுற்றிச் சுருண்டு விழும் அலைகளை உடைய
கடலைக் கடைந்த காலத்து எழுந்த நஞ்சினை உண்ட
கண்டத்தை உடையவனாகிய சிவபிரான் உறையும்
கோயில், செறிந்த இதழ்களை உடைய தாமரை மலராகிய
இருக்கையில் விளங்கும், தாமரை இலையாகிய
குடையின்கீழ் உள்ள இள அன்னம், வயலில் விளையும்
செந்நெற்கதிர்களாகிய சாமரம் வீச
வீற்றிருக்கும் திருவீழிமிழலை யாகும்.  கு-ரை: வாசுகியை கடைகயிறாகச்
சுற்றி, மந்தரமே மத்தாக, தேவர்கள் கூடி
பாற்கடலைக் கடைந்தகாலத்து எழுந்த விடத்தை உண்ட
கண்டன் மன்னுங்கோயில், தாமரையாசனத்தில் இலை
குடையாக, செந்நெற்கற்றை சாமரையாக, இள அன்னம்
வீற்றிருக்கும் மிழலையாம் என்கின்றது.
பொறியரவம் - படப்பொறிகளோடு கூடிய
வாசுகியென்னும் பாம்பு. மறி கடல் - அலைகள்
மறிகின்ற கடல். செய் - வயல். வெறி - மணம். 3. பொ-ரை: வானத்திற் பறந்து
திரிந்து உலக மக்களை நலிவு செய்து உழன்ற
அசுரர்களின் முப்புரங்களையும் அழகிய கண்ணாடியில்,
உளுந்து உருளக்கூடிய கால அளவிற்குள் ஒளி பொருந்திய
தீப்பற்றி எரியுமாறு கொடிய வில்லை
வளைத்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில்,
செழுமையான முத்துக்கள் மகளிரின் பற்களையும், |