பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்151


கல்வெட்டு:

இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள் 15 உள்ளன. அவை இராஜராஜன், இராஜேந்திரன், திரிபுவனவீரதேவன், குலோத்துங்கன் III, சுந்தரபாண்டியன், சரபோஜி மன்னர்கள் காலத்தன. இத்தலம் உய்யக்கொண்டார் வளநாட்டுத் திருப்பாம்புரம் என வழங்கப்படுகிறது. இறைவன் திரும்பாம்புரமுடையார்1 எனவும், இறைவி மாமலையாட்டியாள்2 எனவும், விநாயகப் பெருமான் இராஜராஜப் பிள்ளையார்3 எனவும் வழங்கப்படுகின்றனர்.

இராஜராஜதேவன் காலத்தில் சோழியதரையவேளான் தாமோதரையனால் கோயில் 2 - ஆம் பிராகாரத்தில் மண்டபங்கட்டவும் இதனைப் பராமரிக்கவும் நிலமளிக்கப்பட்டது4. வசந்த மண்டபத்தை சரபோஜி மன்னனுடைய பிரதிநிதியான சுபேதார் ரகுபண்டிதராயன் கட்டினான். கி.பி.1209இல் திருப்பாம்புரத்தில் கடும்பஞ்சம் நிலவியது. ஒரு பொற்காசுக்கு 3-படி நெல் விற்றது. பஞ்சத்தால் வாடிய ஒரு வேளாளன் தன்னுடைய இரண்டு பெண்களை நூறு பொற்காசுக்குக் கோயிலுக்கு அடிமையாக விற்றான்5.

36. திருப்பேணுபெருந்துறை

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். கும்பகோணம் - காரைக்கால் பேருந்து வழியில் நாச்சியார் கோயிலை அடுத்துள்ளது.

தலம்:

இது திருப்பந்துறை என இன்று வழங்குகிறது. அம்மை, முருகன், பிரமன் இவர்கள் பூசித்ததலம். இறைவன் சிவானந்தர். அம்மை மலையரசி. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விருட்சம் வன்னி. முருகனுக்கு ஊமை நீங்கியதாக வரலாறு.

கல்வெட்டு:

அரசியலார் 1932-ல் படியெடுத்த கல்வெட்டுகள் ஐந்து உள்ளன. மதுரைகொண்டபரகேசரி 22-ஆம் ஆண்டுக் கல்வெட்டில்

_________________

1, 2 90 of 1911, 90 of 1911, 3 91 of 1911. 4 99 of 1911, 5 86 of 1911.