எனவும்1, முதல்
இராஜேந்திரன் காலத்து கேரளாந்தக வளநாட்டு
உறையூர்க் கூற்றத்துக் கற்குடியெனவும்2,
மல்லிகார்ச்சுன மகாராஜா காலத்து இராஜகம்பீர
வளநாட்டுப் பிரமதேயமான உய்யக்கொண்டான்
திருமலையெனவும்3 வழங்கப்பெறுகின்றது.
தருமம் ஆற்றிய
மன்னர்கள் முதற்பராந்தகன், கண்டராதித்தன்
மனைவி, பராந்தகன் மாதேவ அடிகளாராகிய
செம்பியன் மாதேவியார், உத்தமசோழன்,
இராஜராஜன் I, பரகேசரி இராஜேந்திரன் I, வீர
இராஜேந்திரன், குலோத்துங்கன் I, மல்லிகார்ச்சுன
மகாராஜா, மயிலைத் திண்ணன் முதலியோர், இவர்கள்
அளித்தன; பெரும்பாலும் விளக்கிற்காகப்
பொன்னும், ஆடும் நிவேதனத்திற்கு நிலமும் ஆம்.
38.
திருப்பாச்சிலாச்சிராமம்
சோழநாட்டுக்
காவிரி வடகரைத்தலம். திருச்சி - முசிறி பேருந்து
வழித்தடத்தில் உள்ளது.
பாச்சில் கூற்றத்து
ஆச்சிராமமாதலின், பாச்சிலாச்சிராமம் என
வழங்கப்படுகிறது. கல்வெட்டுக்களில்
கொள்ளிடத்தின் வடபகுதி பாச்சில் கூற்றம்,
வடகரை மழபாடி நாடு, இராஜாதிராஜ வளநாடு எனப் பல
பகுதிகளால் வழங்கப்பெற்றதாகத் தெரிகின்றது.
கொல்லிமழவன் புதல்விக்கு உற்ற முயலகன் என்னும்
நோயைத் திருஞானசம்பந்த சுவாமிகள்
நீக்கியருளிய தலம். இங்குள்ள நடராஜர்
திருவுருவிலும் முயலகன் உருவம் இல்லாமை
அறியத்தக்கது. திருவடியின்கீழ் அதற்குப்பதில் ஒரு
பெரும்பாம்பிருக்கிறது. சுந்தரமூர்த்திசுவாமிகள்
‘இவரலாதில்லையோ பிரான்’ என இகழ்ந்து பேசிப்
பொருள் மிகப் பெற்றதலம். இறைவனே ஒரு வைசியன்
பெண்ணை மணஞ்செய்து கொண்ட தலம்.
இறைவன்பெயர்
மாற்றறிவரதர், சமீவனேசுவரர்; அம்மையின் பெயர்
பாலசௌந்தரி; தீர்த்தம் அன்னமாம் பொய்கை,
சிலம்புநதி. பொய்கை, அம்பாள் கோயிலுக்கு
எதிரில் இருக்கின்றது. இதன்கரையில்
தலவிருட்சமாகிய வன்னிமரம் இருக்கின்றது.
சிலம்புநதி ஊருக்கு வடக்கில் ஓடுகின்றது. இது
பங்குனியாறு என்றும், அமலையாறு என்றும் சொல்வர்.
___________________________
1 460 of 1908, 2 461 of 1908, 3
474 of 1908.
|