விலை 64 காசு (22 கழஞ்சு
8 மஞ்சாடி)1. குலோத்துங்கன் 23ஆம் ஆண்டில் ஒரு
கங்கதலைவனால் வீரசோழன் மனைவியான தன்னுடைய
மகளுக்கு நன்றுண்டாக விளக்குப் போடப்பெற்றது2.
மூன்றாம் குலோத்துங்கன் 8ஆம் ஆண்டில்
திரிசூலக்காசு கோயிலுக்களிக்கப்பெற்றது3. 34ஆம்
ஆண்டில் கங்க அரசியான அரியபிள்ளையால் இரண்டு
விளக்கு தானம் செய்யப்பெற்றன4. கோராஜகேசரி
வர்மன்-1, 7ஆம் ஆண்டில் இறைவி திருவுருவம்
செய்யவும் ஒரு விளக்குக்கும் ஒரு பிராமணனால் 1700
குழி நிலமும் தூய்நாட்டில் மந்திரம்
பேரவையினின்றும் 1700 குழி நிலமும்
வாங்கப்பெற்றன5. 26ஆம் ஆண்டில் 4ஆம்
விக்கிரமாதித்தனிடமும் 3-ஆம் ஜயசிம்மனிடமும்
வெற்றி பெற்றமையும், கோயிலுக்கு விளக்கு
பொருத்தியமையும் தெரிகிறது6. 7ஆம் ஆண்டில்
மதுராந்தக கண்டராதித்தன் கோயிலுக்கு
வந்தமையும் 1000 குடங்களால் அபிஷேகித்தமையும்,
வருமானத்தை ஆராய்ந்தமையும்
குறிக்கப்பெற்றுள்ளன7.
கோராஜ
இராஜகேசரிவர்மன்-1, 16ஆம் ஆண்டில் 700 குழிநிலம்
சங்கரதேவனுக்கு விற்றமையும் அவன் அதைத் திருவைய
ஈசுவரருக்களித்தமையும் தெரிகிறது8.
கோராசகேசரிவர்மன் இராஜராஜதேவன் 20ஆம்
ஆண்டில் 90 ஆடுகள் தானம்செய்தான். 3ஆம் ஆண்டில்
தூய்நாட்டிலுள்ள குக்கனூர் கிராமத்தின்
வருவாய்களைத் திருவல்லம் கோயிலுக்குக்
கொடுத்தான்9. மகாவலி வாணராயனது பொன்படு
குட்டத்திலுள்ள சில நிலங்களை ஒருவன் வாங்கி
விளக்கிற்காகவும் படையலுக்காகவும்
கொடுத்தான்10. வாணவித்தியாதரன் காலத்து
விளக்கெரிக்க 20 கழஞ்சு பொன்
கொடுக்கப்பெற்றது11. விக்கிரமாதித்தன்-1,
வேண்டுகோளின்படி மூன்று கிராமங்கள் (விடேல்
விடுகு விக்கிரமாதித்த சதுர்வேதிமங்கலம்) தானம்
செய்யப்பட்டன12. வாணராயனது சகம் 810-ல்
எட்கூரிலுள்ள ஒரு பார்ப்பனனால் காரநாட்டிலுள்ள
வன்னிப்பேடு கிராமத்தாரிடம் 25 கழஞ்சு பொன்
கொடுக்கப்பெற்று அதன் வட்டியிலிருந்து விளக்குப்
போடப்பெற்றது13. சோழபூபன் மகனான வீரசம்பன்
சகம் 1236 இல் அர்த்த மண்டபம் ஞானமூர்த்தி என்ற
பெயருடைய துறவியாலும் பிருதா அரசனாலும்
கட்டப்பெற்றது. மேலும் கருப்பக்கிருகமும்
கட்டப்பெற்றது. (வீரசம்பன் படைத்தலைவனா?
ஒருநாயகனா? ஊகிக்க வேண்டியுள்ளது)14.
வாணவித்தியாதர ராஜன் என்கிற வாணராயன்
விளக்கிற்கு நெய்யிட 25 கழஞ்சு பொன்
வழங்கினான்15.
___________________________
1 5 of 1890, 2 300 of 1897, 3 301
of 1897, 4 303 of 1897, 5 8A of 1890, 6 9 of 1890, 7 10 of 1890, 8 11 of 1890, 9
1415 of 1890, 10 12 of 1890, 11 298 of 1897, 12 1A of 1890, 13 1B of 1890, 14 3
of 1890, 15 77 of 1889.
|