பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்163


காலத்துக் கல்வெட்டும் அறிவிக்கிறது1. இறைவனுக்கு முத்துக் கழுத்தணி, வைரமுடி இவற்றைக் காரிபுலியனான சோழமாராயன் அளித்தான், விக்கிரமசோழன் திருமாளிகைப் பத்தியைக் கட்டினான்2. மற்றும் விளக்கிற்காகவும், விழாவிற்காகவும் பொன்னும், நிலமும் அளித்த செய்தியை அறிவிக்கின்றன. முதுபகவர் என்ற கோயிலொன்று குறிப்பிடப்படுகிறது3.

உமாபரமேஸ்வரி காளி அம்மையாக இருத்தல் வேண்டும். இதனை அமைத்தவன் விக்கிரமசோழன். பூசைக்கும் அமுதுக்குமாக நிலம் வழங்கியிருக்கிறான். இராஜேந்திரசோழனும் அக்கோயிலுக்கு நிலம் வழங்கினான்4.

47. திருவல்லம்

தொண்டை நாட்டுத்தலம். வேலூர் ஆர்க்காட்டிலிருந்து பேருந்துகளில் செல்லலாம். இத்தலம் இப்பொழுது திருவலம் என வழங்கப்பெறுகிறது. வில்வாரண்யதலம், தீக்காலி என்பான் பூசித்துப் பேறுபெற்றமையான் தீக்காலி வல்லம் எனவும் வழங்கும். நவக்கிரகங்களும், வல்லாளனும் பூசித்துப் பேறுபெற்றனர். சுவாமி வல்லநாதர். இறைவி வல்லாம்பிகை. தீர்த்தம் கௌரிதீர்த்தம்.

கல்வெட்டு:

கோப்பரகேசரியான இராஜேந்திரசோழன் (கி.பி. 1050-62) 3-ஆம் ஆண்டில் உத்தியோகஸ்தன் ஒருவனிடமிருந்து 25 கழஞ்சு பொன்வாங்கித் தீட்சிதரிடங் கொடுத்தான்5. அதேயாண்டில் வாணபுரத்திலுள்ள பேரவையோர் சங்கரதேவன் மகனான வைதும்ப சோமநாதனுக்கு 1000 குழி நிலம் விற்றதையும் அவர்கள் அதைத் திருவைய ஈசுவரருக்கு உரிமையாக்கியதையும் குறிக்கிறது6. 4-ஆம் ஆண்டில் முதல் இராஜராஜன் உத்தியோகத்தனான ஈராயிரவன் பல்லவராயனால் இராஜராஜேஸ்வரர் கருப்பக்கிரகம் கட்டப்பெற்றது. 2 விளக்கிற்காக 2000 குழி நிலமும் அளிக்கப்பெற்றது7.

கோராஜகேசரி வர்மனான இராஜமகேந்திரன் காலத்து 2-ஆம் ஆண்டில் படைத்தலைவனொருவன் திருவல்லம் பேரவையிலிருந்து 800 குழி நிலம்பெற்று அதைக் கோயிலுக்குக் கொடுத்தான். அதன்

______________________________

1 108 of 1910, 2 99 of 1910, 3 111 of 1910, 4 100, 101 of 1910, 5 75 of 1889, 6 92 of 1889, 7 299 of 1897.