பக்கம் எண் :

162தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


இத்தலம் கோயில் திருமாகாளம் என வழங்கும். அம்பன், அம்பாசூரன் இருவரையும் கொன்ற காளி பாவந்தீர இறைவனை இத்தலத்துப் பூசை செய்தாள். மாகாளரிஷியும் பூசித்த தலம். காளிகோயில் தெற்குப் பிராகாரத்தில் உள்ளது. வைகாசி மாதத்தில் சோமாசிமாறர் யாக உற்சவம் நடைபெறும். சிறிய உருவமுடைய பாணலிங்கம், குவளை சாத்தப்பட்டுள்ளது. இறைவன் காளகண்டேசுவரர். இறைவி பட்சநாயகி. தீர்த்தம் மாகாளதீர்த்தம். சோமாசிமாற நாயனார் யாகஞ்செய்த தலம். இத்தலம் பேரளம் திருவாரூர் மார்க்கத்திலுள்ள பூந்தோட்டம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது.

கல்வெட்டு:

இத்தலம் முதற்குலோத்துங்கன் காலத்து உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர் திருமாகாளம் என வழங்கப்பெற்றது1. இராஜகேசரிவர்மனான குலோத்துங்கன் காலத்து, பூபாலகுலவல்லி வளநாட்டு அம்பர்நாட்டு அம்பர் மாகாளம் எனவும்2 வழங்கப்பெற்றது. இறைவன் திருமாகாளம் உடையார்3, திருமாகாளத்து மகாதேவர்4 என வழங்கப்பெறுகிறார். கோயிலுக்கு முதற்குலோத்துங்கன் காலத்து நுளம்பராசன் வேண்டுகோளுக்காக மாத்தூர் திருச்சிற்றம்பலநந்தராசனால் புரவுவரி விளாகம் என்ற கிராமம் கோயிலுக்கு அளிக்கப்பெற்றது5. மேலும் அவனது ஆட்சி 42-ஆம் ஆண்டில் வேதந்தூர் என்ற கிராமத்தை அம்பர் உதயமார்த்தாண்டன் அளித்திருக்கிறான்6.

சேக்கிழான்வேளான் திருவாய்க்குலமுடையான் எயினிகுடி கிராமத்தை அளித்தான். முன்னரே அதை அநுபவித்துவந்த காணியாளரைத் தள்ளிவிட்டுப் புதிதாகப்பயிர் செய்ய ஏற்பாடு செய்தான். விக்கிரமசோழன் காலத்தில் (கி.பி. 1118-35) நிலமளித்த செய்தி அறியப்பெறுகிறது. சிறப்பாக ஆட்கொண்ட நாயகனையும் அம்மையையும் கோயிலுக்கு வார்த்துக்கொடுத்து, திருவமுதுக்கு க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுப் பனையூர் நாட்டுச் சிறுவேலூரானான அமுதன் திருச்சிற்றம்பலமுடையான் உதயமார்த்தாண்ட மூவேந்த வேளான் நிலமுமளித்தான். அதே அம்மைக்கு மற்றோர்சிறுவேளூர் உடையான் நிலமுமளித்திருக்கிறான். இந்த ஆட்கொண்டநாயகர் என்பது சோமாஸ்கந்தரின் பெயர்போலும். இவரைப் பற்றி விக்கிரமசோழன்

____________________

1 93 of 1910, 2 107 of 1910, 3 107 of 1910, 4 116 of 1910, 5 94 of 1910, 695 of 1910.