நந்தியைப்
பிரதிஷ்டை செய்து அதற்கு முன்பக்கத்தில்
பொற்றூண் ஒன்றை நிறுவினான். வீரப்பிரதாப
அச்சுதராயன் காலத்தில் மல்லப்ப நாயுடு என்பவன்
பிரமராம்பா அம்மைக்கு ஒரு மணியும் சரிகையாடையும்
அளித்தான். விஜயராயமகாராயன் மகளும், பாண்டிய
பெருமாள் தேவனின் மனைவியுமாகிய
லெட்சம்மாள்ஜிஆயி என்பவள் தினசரி ஐந்து
ஜங்கமர்களுக்கு உணவளிக்க நிலம் வழங்கினாள்.
சாளுவ அரசனான பதமல்லப்பன் ஒருகுளம்
வெட்டியிருக்கிறான். காகதீய அரசனான
பிரதாபருத்திரதேவ மகாராஜர் காலத்தில் அவனுடைய
முதல் மந்திரி உச்சிக்கால வழிபாட்டிற்காக
கமநாட்டில் நிலம் வழங்கியிருக்கிறார். ஜனமாதா
மண்டபத்திற்கருகில் ஒரு கோயிலையும்
கட்டியிருக்கிறார். அன்னப்பஐயன் என்பவன்
மல்லிகார்சுனதேவர்க்கும் பிரமராம்பா
தேவிக்கும் நைவேத்திய நிபந்தங்களை
அளித்ததோடு முகமண்டபங்கட்டுவித்தான்.
தென்னண்டை மதில் பிராகாரத்தைப்
பழுதுபார்த்தான். இரும்புத் தூண்களைநிறுத்தித்
தெற்குக் கோபுரத்தையும் பழுதுபார்த்தான்.
பயிராகிஸந்தகி என்பவன் தன் மனைவியின்
பெயரால் பூந்தோட்டத்திற்கு நிலம்
அளித்துள்ளான். இவையன்றி நந்திநாதர்,
பிருங்கிநாதர் முதலியவர்களை வழிபடுகிறவர்களுக்கு
வீடுகள் கட்டி அளித்த செய்தியும், செங்கையன்
என்பார் சந்தனக்கல் வைத்ததும்
அறியப்பெறுகின்றன. பிரதான கங்கைக்கு இரண்டாம்
விதரிகரனின் மனைவியான கடம்பவித்தலம்பா
படிக்கட்டு கட்டினாள். வித்தலேசுவரருக்கு ஒரு
உருவச்சிலை வழங்கினாள். இந்தத் தருமங்களைச்
செய்ய இறைவன் அவளுக்குக் கனவில்வந்து
அருளியதாகக் குறிப்பிடுகிறாள். மேலும்
சந்திரசேகரன் வீரபத்திரதேவர் கோபுரத்தையும்,
தூண்களையும், பொற்கலசங்களையும்
அமைத்திருக்கிறான். உதயகிரி அப்பனையங்காரு
நந்தித் தூணிலிருந்து துர்க்காதேவிகோயில்
வரையில் படிக்கட்டுகளைக் கட்டுவித்தான்.
கொண்டபட்டி என்பவன் கோயில் முழுமையும்
புதுப்பித்திருக்கிறான். இவையன்றிப் பல
அன்பர்கள் பொற்றூண்கள் அமைத்தும்,
படிக்கட்டமைத்தும், முகமண்டபங்கட்டியும்
பணிசெய்தார்கள் என்று தெரிகிறது.
49. திருக்கொடிமாடச்
செங்குன்றூர்
கொங்குநாட்டுத்
தலம். இத்தலம் சங்ககிரிதுர்க்கம் இரயில்
நிலையத்திலிருந்து கிழக்கே 9 கி.மீ. தூரத்தில்
இருக்கிறது. ஈரோட்டிலிருந்தும் நாமக்கல், சேலம்
ஆகிய ஊர்களிலிருந்தும் பேருந்து மூலமாகவும்
இத்தலத்தை அடையலாம். மலைமேல் கோயில் வரை
செல்லப் பேருந்து வசதி உள்ளது.
|